விழுப்புரம் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: TNPSC Group-II முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி!

TNPSC
TNPSC
Published on

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மாணவர்களை பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தி வருகிறது.இம்மையத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு தேர்வானைத் தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சென்ற 2024ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு தேர்வானையத்தின் GROUP - II முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இந்த வழிகாட்டும் மையத்தில் நடந்தன. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட 193 மாணவர்களில் 125 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் 12 மாணவ/மாணவிகள் பல்வேறு துறைகளில் பணிவாய்ப்பினையும் பெற்றுள்ளனர். இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தின் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்கள்தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழிகாட்டும் மையத்தில் TNPSC Group - II prelims (முதல்நிலை) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 30.07.2025 முதல் 18.09.2025 வரை பாடவாரியான இலவச அட்டவணை தேர்வுகள் மற்றும் 3 மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNPSC) Group-II prelims (முதல்நிலை) தேர்வுக்கு 15.07.2025 அன்று 650 பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது விண்ணப்பதாரர்களுக்கு 28.09.2025 அன்று தேர்வும் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து TNPSC Group II Mains (முதன்மை) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற 20.11.2025 அன்று காலை 10.00 மணி முதல் இந்த வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளன.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.இந்த TNPSC Group-II mains இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் விழுப்புரம் மாவட்டப்பகுதி மாணவர்கள்

தங்கள் passport size photo-1 மற்றும் Group - II prelims (முதல்நிலை) தேர்விற்கான Hall ticket Xerox 1 ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்,விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த TNPSC Group - II (முதன்மை) தேர்வினை எழுத இருக்கும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இத்தகவலை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தன்னுடைய அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
பூனை குறுக்கே போனா வண்டியை ஏன் நிறுத்தணும்? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு!
TNPSC

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com