செம்பன் உடையில் கலக்கும் கார்த்தியின் வைரல் போட்டோஸ் !!

செம்பன் உடையில் கலக்கும் கார்த்தியின் வைரல் போட்டோஸ் !!

பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத்தேவனோடு பயணிக்கும் செம்பன் குதிரையை உடையில் பொறித்து அணிந்து, போட்டோவில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகர் கார்த்தி.

இந்த விளம்பர நிகழ்வுகளில் நடிகர் கார்த்தி படத்தில் வந்தியத்தேவனோடு பயணிக்கும் குதிரை செம்பனை உடையில் பொறித்து வித்தியாசம் காட்டியிருக்கிறார். செம ஸ்மார்ட்டாக கார்த்தி வரும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியத் திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி வரும், மணிரத்தினம் இயக்கி லைகா நிறுவனம் தயாரித்துள்ள (PS 2) பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ,ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா உட்பட நட்சத்திர பட்டாளங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நடிகர்களின் பேச்சும் உடையும் என எங்குத் திரும்பினாலும் பொன்னியின் செல்வன் மட்டுமே.

பொன்னியின் செல்வன் கதையில் நாவல் முழுக்க பயணிக்கும் ஒரே பாத்திரம் வந்தியத்தேவன். அந்த வந்தியத்தேவனோடு பயணிக்கும் மற்றொரு பாத்திரம் செம்பன் குதிரை. அந்த குதிரையின் நினைவாக அதன் வரைபடத்தை உடையில் பொறித்துள்ளார் கார்த்தி. இந்த உடை அணிந்திருக்கும் கார்த்தியின் புகைப்படங்கள், தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com