பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் வானொலி மூலமாக நாட்டு மக்களிடம் ஆற்றும் “மன் கி பாத்” என அழைக்கப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30 ம் தேதியுடன் 100வது பகுதியை வெற்றிகரமாக எட்டியது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி மக்களிடம் எந்தளவுக்கு வரவேற்பினை பெற்றுள்ளது தொடர்பாக "Institute for Competitiveness" என்ற நிறுவனம் சார்பில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 47.5% பேர் மிகவும் நன்றாக உள்ளது என்றும், 25% பேர் நன்றாக உள்ளது என்றும், 13% சுமார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“மனதின் குரல் நிகழ்ச்சி எப்படிப்பட்ட நிகழ்ச்சி? என்ற கேள்விக்கு 33% பேர் பொது மக்கள் தொடர்பான விஷயங்களைப் பேசும் நிகழ்ச்சி என்றும், 8% பேர் வீடு மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களைப் பேசும் நிகழ்ச்சி என்றும், 2% பேர் சாதனையாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்ச்சி என்றும், 2% பேர் இந்தியப் பிரதமர், வெகு அன்னியோன்னியமான குரலில், நம்முடன் பேசுவது போன்ற நிகழ்ச்சி என்றும், 39% பேர் இவை அனைத்துமே கொண்ட நிகழ்ச்சி என்றும் கருத்து கூறியுள்ளனர்.
பிரதமரின் பேச்சு வழக்கு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? என்ற கேள்விக்கு 81% பிடித்திருக்கிறது என்றும், 3% இல்லை என்றும், கூறியுள்ளனர்.
மனதின் குரல் நிகழ்ச்சி தொடர வேண்டுமா? என்ற கேள்விக்கு 81% பேர் தொடர வேண்டும் என்றும், 13% வேர் வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.