தொகுதி மறுவரையறையில் இருக்கும் ஆபத்து! 39 இடங்கள் 32-ஆக குறையும் - ப.சிதம்பரம் எச்சரிக்கை..!

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Updated on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரைகள் இடையே மத்திய அரசு அறிவிப்பில் நாளை நடைபெற போகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து மசோதாக்கள் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து எதிர்க்கட்சியினர் தங்கள் வலுவான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலினைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் "தொகுதி வரையறை தேவைதான் ஆனால் மத்திய அரசு செய்வது ஏமாற்று வித்தை" என தனது எதிர்ப்பு பேட்டியைத் தந்துள்ளார்.

தொகுதி மறு வரையறை என்று சொன்னபோது காங்கிரஸ் எதிர்த்தது. தொகுதி மறு வரையறை கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கை ஏமாற்று வேலை. இப்போது மக்களவை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

தென் மாநிலங்களின் குரலையொடுக்கும் முயற்சியை மத்திய அரசு செய்கிறது. நாடாளுமன்றம் நாளை கூடுகிறது என்றால் இன்று வரைவு சட்ட மசோதாவின் பிரிவுகள் வெளியாகி உள்ளன.

தொகுதி மறு சீரமைப்பு நடந்தாலே தமிழகத்தில் 39 மக்களவை இடங்கள் 32 ஆக குறையும். தமிழகத்தில் 39 தொகுதிகள் 58 ஆக உயர்ந்தாலும் மறுவரையறைக்குப் பின் அது 32 ஆக குறையும் .

தேர்தலுக்குப் பின் கூட்டத்தை நடத்தலாமே? ஏப்ரல் 29ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தலாமே?

தமிழ்நாடு , மேற்குவங்க எம்பிக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க கூடாது என்பதால் அவசரமாக கூட்டம் கூட்டப்படுகிறது. தமிழ்நாடு மேற்குவங்க எம்பிக்கள் இல்லாமலேயே மசோதாவை நிறைவேற்றலாம் என மத்திய அரசு எண்ணுகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை நிகழும் 13 நாட்கள் இந்த கூட்டத்தொடரை தள்ளிப் போட்டால் என்ன ஆபத்து ஏற்பட போகிறது? திமுக காங்கிரஸ் திரிணாமுல் கட்சி நிர்வாகிகளின் பரப்புரையை முடக்கவே நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்படுகிறது.

பா சிதம்பரத்தின் பேட்டியைத் தொடர்ந்து எம்பி சு வெங்கடேசனும் தனது கருத்தை கூறியுள்ளார்.

"நாளை அறிமுகப்படுத்தப்படும் மசோதா நாம் அஞ்சுவதை விட மிக ஆபத்தான அம்சங்களை கொண்டுள்ளது மாநிலத்தின் தற்போதைய இடங்களில் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதி செய்ய ஒரு வரி கூட இல்லை .மசோதாவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி ஆவேச அறிக்கை ஒன்றை இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த சரண் அடைந்ததை பழனிசாமியின் அமைதி நமக்கு உணர்த்துகிறது " என பாராளுமன்ற எம்பி சு வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#JUST IN : மத்திய அரசுக்கு எதிராக திமுக போர் கொடி! இன்று காலை 11 மணிக்கு திமுக எம்.பி.க்கள் அவசர கூட்டம்...!
ப.சிதம்பரம்
logo
Kalki Online
kalkionline.com