தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு..!

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்
Updated on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

பணப்பட்டுவாடா மற்றும் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

வாகனப் பரிசோதனைகள் மற்றும் பொதுமக்களிடம் ரொக்கம்/பொருட்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மட்டும் துணை இராணுவம் மற்றும் போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை மறு வாக்குப்பதிவுக்கு எந்த அவசியமும் இல்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தளர்வுகள் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4, 2026 அன்று அறிவிக்கப்படும் வரை, சில அடிப்படை கட்டுப்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

இதையும் படியுங்கள்:
பணத்தை விட பெரிய சொத்து எது? சிறுவன் கற்றுத்தந்த பாடம்!
இந்திய தேர்தல் ஆணையம்
logo
Kalki Online
kalkionline.com