வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் எனபது சிலருக்கு கனவாக இருக்கும். இந்தியர்கள் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகினறனர். அவ்வகையில் தற்போது துபாயில் இந்தியர்கள் வேலை செய்வதற்கான அருமையான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இதன்படி வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி நேர்காணல் நடைபெற இருக்கிறது.
நேர்காணலில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுவர் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் H1-B விசா முறையில் அமெரிக்கா கொண்டு வந்த கடுமையான விதிகளின் காரணமாக பல இந்தியர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் துபாயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பது, வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல நினைக்கும் பலருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
துபாயில் வேலைக்கு சேர பட்டப்படிப்பு அவசியம் இல்லை என்பது தான் இதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே துபாய்க்கு வேலைக்கு போக முடியும். 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால், 1 வருட பணி அனுபவம் அவசியம் தேவை. துபாய் நாட்டில் எலக்ட்ரீசியன், பிளம்பர், கொத்தனார், ஃபிட்டர், பெயின்டர் மற்றும் லேபர் உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வருகின்ற 8 ஆம் தேதி திருச்சியில் நேர்காணல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய்) வேலைக்கு சேர விரும்பும் நபர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கொத்தனார், ஃபிட்டர், பெயின்டர், எலக்ட்ரீசியன் மற்றும் லேபர் உதவியாளர் உள்பட பணியிடங்கள் நேர்காணலின் மூலம் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம், விசா மற்றும் விமான டிக்கெட் உள்ளிட்டவை வேலை அளிக்கும் நிறுவனங்களால் வழங்கப்படும்.
விருப்பமுள்ள ஆண்கள் ovemclnm@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு சுயவிவரக் குறிப்பு மற்றும் சான்றிதழ்களை வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நவம்பர் 8 ஆம் தேதி காலை 8 மணிக்கு நேர்காணல் தொடங்கும். மேலும் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.omcmanpower.tn.gov.in என்ற தளத்தைப் பார்வையிவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: 10வது தேர்ச்சி அல்லது 1 வருட பணி அனுபவம்.
வயது வரம்பு: 22 முதல் 45 வரை.
சம்பள விவரம் (மாத வருமானம்):
எலக்ட்ரீசியன்: ரூ.47,250
கொத்தனார்: ரூ.47,250
ஃபிட்டர்: ரூ.47,250
பிளம்பர்: ரூ.47,250
பெயின்டர்: ரூ.44,100
லேபர் உதவியாளர்: ரூ.29,900.
நேர்காணல் நடைபறும் முகவரி:
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவெறும்பூர் - 620014, திருச்சி.
தொலைபேசி: 044-22502267
வாட்ஸ்அப் எண்: 9566239685