Layoff
Layoff

ஐடி ஊழியர்களே உஷார்..! AI கற்றுக் கொள்ளவில்லை என்றால், வேலை இல்லை.!

Published on

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கி விட்டது. இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளிலேயே ஐடி துறையில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வேலையிழப்பைச் சந்திக்க நேரிடும் என நிதி ஆயோக் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே ஐடி துறைகளில் வேலையிழப்பு மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதற்கேற்ப பல முன்னணி நிறுவனங்கள் வேலையிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கால மாற்றத்திற்கு ஏற்ப ஐடி ஊழியர்களும் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐடி ஊடியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், வேலை இல்லை என்ற நிலைமை வெகு விரைவில் வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தின் வரவால், 20 லட்சம் ஐடி ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் மட்டும் தற்போது 80 லட்சம் ஐடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இல்லையெனில் அடுத்த சில ஆண்டுகளில் 20 லட்சம் ஐடி பணியாளர்கள், வேலையை இழக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

ஒருவேளை ஐடி ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதோடு ஏஐ தொழில்நுட்பத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளது. 20 லட்சம் பேரின் வேலை இழப்பு என்பது இந்திய பொருளாதாரத்தையே அசைத்துப் பார்க்கும். அதோடு அவர்களின் குடும்ப வருமானமும் குறைந்து விடும் என்பதால், நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். ஆகையால் விரைந்து ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு, தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

உலகில் அதிக இளைஞர்களை கொண்டுள்ள நாடு இந்தியா என்பதால், ஏஐ தொழில்நுட்பத்தால் வரும் மாற்றத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்தியா முன் வர வேண்டியது அவசியம். இதற்கு நாடு முழுக்க ஏஐ பயிற்சிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் அதிக ஏஐ நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட நாடாக இந்தியா மாற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
சைபர் கிரைம் மோசடிக்கும் துணை போகிறதா AI தொழில்நுட்பம்..! உத்தரகாண்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Layoff

நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 25,000 ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இனிவரும் காலங்களில் இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில நிறுவனங்கள், ஊழியர்களை வேறு வேலையைத் தேடிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் ஐடி ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
பாலைவனத்தில் செயற்கை மழை..! ஏஐ செய்த அற்புதம்..!
Layoff
logo
Kalki Online
kalkionline.com