இந்திய வீரர்களின் உதவி எங்களுக்குத் தேவையில்லை – ரஷ்ய அதிகாரி!

Russia and India
Russia and India
Published on

ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் இந்திய வீரர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திய வீரர்கள் உதவி எங்களுக்கு அவ்வளவாக தேவைப்படவில்லை என்றும், உடனே அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

இந்திய பிரதமர் மோடி, சமீபத்தில் அரசு முறை சுற்றுப்பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். தற்போது இரண்டு நாடுகளுக்கும் சென்றுவிட்டு நாடு திரும்பியுள்ளார் மோடி. அவர் ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் இந்திய வீரர்களை உடனே விடுவிக்க கோரினார்.

ராணுவத்திற்கு ஆட்சேர்பு என்பது முழுக்க முழுக்க வணிக ரீதியானது என்றும், இந்தியர்கள் தனது ராணுவத்தின் ஒரு பகுதியாக இருப்பதை ரஷ்யா ஒருபோதும் விரும்பவில்லை என்றும் போர்களில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் ரஷ்ய அரசு பொறுப்பாளர் ரோமன் பாபுஷ்கின் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தப் பிரச்சினையில் நாங்கள் இந்திய அரசின் பக்கமே இருக்கிறோம். விரைவில் பிரச்சனை தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று கூறிய ரோமன் பாபுஷ்கின், "நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.. இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. ரஷ்யா ராணுவத்தில் உள்ள வீரர்கள் குறித்து நாங்கள் எந்தவொரு அறிவிப்பையும் செய்திருக்க மாட்டோம். அதையும் நீங்கள் நோட் செய்திருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பூரி ஜெகன்னாதர் கோவில்: 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!
Russia and India

பெரும்பாலான இந்தியர்கள் பணத்திற்காக ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளனர். அதுவும் மிகக் குறைந்த அளவிலேயே ராணுவத்தில் இணைந்துள்ளனர். 50, 60 அல்லது அதிகபட்சம் 100 இந்தியர்கள் தான் ரஷ்ய ராணுவ்ததில் இருப்பார்கள். அவர்கள் காசு சம்பாதிக்கவே ராணுவத்தில் இருக்கிறார்கள்.. இந்தியர்கள் எங்கள் நாட்டு ராணுவத்தில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

மேலும், இதுபோல இங்கு வந்தவர்களில் பலருக்கும் உரியா விசா கூட இல்லை. அவர்கள் சுற்றுலா விசாக்களில் வந்துவிட்டு, சட்டவிரோதமாக வேலை செய்கிறார்கள்." என்று பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com