மே.வங்கத்தில் கனமழை...! வெள்ளம் மற்றும் நிலச்சரிவு 28 பேர் பலி..! நேபாள் மற்றும் பூட்டானிலும் பாதிப்பு..!

flood
floodsource : Orissa post
Published on

மேற்கு வங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 28 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.பல வீடுகள் மண்சரிவுகளில் சிக்கி தரைமட்டமாகியுள்ளது , பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது, சில  பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன .

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள் உள்பட இது வரை 28 பேர் பலியாகி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. டார்ஜீலிங் பழைய நிலைக்கு வர போராடும் நிலையில் இன்னும் ஒரு துயரமான செய்தி மே.வங்க மக்களை அச்சுறுத்தி உள்ளது.மேற்கு வங்கத்தின் அருகே உள்ள அண்டை நாடான பூட்டானில் , வம்சு நதியின் ஒரு அணை முழுவதும் நிரம்பி வழிவதாக பூட்டான் அரசு எச்சரித்துள்ளது. 

தொழில் நுட்ப கோளாறு காரணமாக சில நாட்கள் வம்சு நதி அணையில் இருக்கும் அதிகப்படியான நீர் வெளியேற்றப்படாமல் இருந்துள்ளது. இதனால் கனமழையில் அணைய முழுமையாக நிரம்பி விட்டது. இப்போது அந்த அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டால் அது மேற்கு வங்கத்தை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.மே.வங்கத்தின் வடக்கில் பூட்டான் நாடு அமைந்துள்ளது, இங்கிருந்து வரும் பெருவாரியான வெள்ளம்  ஜல்பைகுரி மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களை வெள்ளத்தில் மூழ்க வைக்கும். ஏற்கனவே தொடர்ச்சியாக இந்த மாவட்டங்களில் கனமழை பெய்து பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் பூட்டானின் வெள்ளமும் சேர்ந்தால் நிலைமை மிகவும் மோசமாகும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளியன்று தமிழ்நாட்டில் மழை பெய்யுமா..? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்..!
flood

இமயமலைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான வானிலை நிலவி வருகிறது. கனமழை காரணமாக நேபாளம் மற்றும் பூட்டான் உட்பட கிழக்கு இமயமலைப் பகுதி முழுவதும் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  நிலச்சரிவில் அண்டை நாடான நேபாளத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன, மேலும் நேபாளத்தில் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதே போல பூட்டானும் கடுமையான வெள்ள பாதிப்பை எதிர் கொண்டுள்ளது. அங்கு இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில்  அமோச்சு நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட

மக்களை மீட்டுள்ளனர். நேபாள எல்லையில் எவரெஸ்ட் சிகரத்தின் திபெத்தியப் பகுதியில் கிட்டத்தட்ட 1,000 பேர் சிக்கியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் உள்ளிட்ட பகுதியில் அக்டோபர் 6 ஆம் தேதி வரை அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சர்சாலி, ஜஸ்பிர்கான், மிரிக் பஸ்தி, தர் காவ்ன் நாக்ரகாட்டா மற்றும் மிரிக் ஏரிப் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.  

மே.வங்கத்தின் பல இடங்களில் சாலைகள் தடைபட்டுள்ளதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மிரிக்- சுகியாபோக்ரி சாலை உட்பட முக்கிய மலைப்பாதைகளில் மண்சரிவுகள் மற்றும் சாலை சரிந்து வாகனங்கள் எதுவும் செல்ல முடியாதபடி மோசமான சூழலில் உள்ளது.தேசிய பேரிடர் மீட்பு பணியினர் அங்காங்கே சாலைகளை சீரமைத்து ,  தற்காலிக பாலங்களை அமைத்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com