AI 3D photos
AI 3D photos

புதுசு கண்ணா புதுசு! சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் ஏ.ஐ. 3டி ‘டிரெண்டிங்' புகைப்படங்கள்..!

தற்போது ஜெமினி ஏ.ஐ. (Gemini Al) மூலம் உருவாக்கப்படும் 'நானோ பனானா' (Nano Banana) என்ற வகை புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
Published on

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) என்பது மனித நுண்ணறிவைப் போலவே பகுத்தறிவு, திட்டமிடல், முடிவெடுத்தல் மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் கணினி அறிவியலின் ஒரு கிளையாகும். தரவு, வன்பொருள் மற்றும் இணைப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மனிதர்கள் செய்யும் பணிகளை திறம்படச் செய்யும் கணினி அமைப்புகளை உருவாக்குவதே இதன் முக்கியப் பணியாகும். விலைமதிப்பற்ற சேவைகளை வழங்கவும், நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்தவும் AI உதவுகிறது.

சுருக்கமாக சொல்வதென்றால், செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரங்களை புத்திசாலித்தனமாகச் செயல்பட வைக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். இது மனித நுண்ணறிவைப் போன்ற திறன்களைக் கொண்டு, பல்வேறு துறைகளில் உதவவும், சிக்கலான பணிகளைச் செய்யவும் உதவுகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள், பாடல்கள் என அனைத்தையுமே உருவாக்க முடியும்.

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் சமீப காலங்களாக நம் அனைவரையும் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சமீபத்தில் ‘சாட் ஜி.பி.டி.’ என சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு தளம் உருவாக்கிய ‘ஜிப்லி’ புகைப்படம் சமூக வலைதளங்களில் ‘டிரெண்ட்’டான நிலையில் பலரும் தங்களுடைய புகைப்படங்களை ‘ஜிப்லி’ புகைப்படமாக மாற்றி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பகிர்ந்து வந்தனர்.

இதையும் படியுங்கள்:
மக்கள் நலம் காக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)!
AI 3D photos

ஒன்று போய் மற்றொன்று என்பது போல், இதன் தொடர்ச்சியாக ‘ஜிப்லி’ புகைப்படம் டிரெண்ட்டிங் மாறி தற்போது ‘ஜெமினி ஏ.ஐ.’ (Gemini Al)மூலம் உருவாக்கப்படும் ‘நானோ பனானா’ (Nano Banana) என்ற ‘ஹை டீட்டெயில்டு 3டி பிக்யூரின்’ புகைப்படங்கள் (மினியேச்சர் சிலைகள்) சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. இந்த ‘ஹை டீட்டெயில்டு 3டி பிக்யூரின்’ புகைப்படத்திற்கு அடிமையான பலரும் தங்களது புகைப்படங்களை மினியேச்சர் சிலைகளாக வடிவமைத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த முறையில் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்ய சில வினாடிகளே போதுமானது. அந்த வகையில், ‘ஜெமினி 2.5 பிளாஷ் இமேஜ் டூல்’ (Gemini 2.5 Flash Image Tool) மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், 10 முதல் 30 வினாடிகளில் இந்த 3டி புகைப்படமாக உருவாக்கி கொடுத்து விடுகிறது.

இணையவாசிகள் பலரும் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை நேனோ பனானா புகைப்படங்களாக மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சில தகவல்களை உள்ளீடு செய்து அது சார்ந்த புகைப்படங்களை தரச்சொன்னாலும் அதையும் 3டி புகைப்படமாக வழங்கும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மென்பொருளை பயன்படுத்தி ‘செல்பி’ புகைப்படங்களை ‘அனிமேஷன் ஹீரோ’க்கள், ‘சைபர்பங்க்’ அவதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு ‘ஸ்டைல்’களில் மாற்றவும் முடியும் என்பதால் பலரும் தங்களது புகைப்படங்களை இவ்வாறு பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இவை அனைத்தையும் இந்த மென்பொருள் இலவசமாக இதை செய்து கொடுக்கிறது என்பதுடன் எளிமையாகவும், வேகமாகவும் வழங்குகிறது என்பதால் அனைவரும் இதனை முயற்சிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ‘ஹை டீட்டெயில்டு 3டி பிக்யூரின்’ புகைப்படங்களால் கவரப்பட்டு இளைஞர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விலங்குகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ‘டிரெண்ட்’ ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
செயற்கை நுண்ணறிவு: நன்மைகளும் நெறிமுறை சவால்களும்!
AI 3D photos

https://aistudio.google.com/prompts/new_chat என்ற இணையதளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள PROMT- ஐ பயன்படுத்தி இந்த வகை புகைப்படங்களை ஜெமினி ஏ.ஐ.யில் உருவாக்கி கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com