

தமிழ்நாட்டில் காவல்துறையில் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றம் பிற ஒகுங்கீன நடவடிக்கைகள் குறத்து பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் (WhatsApp NO) அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் 'உள் கண்காணிப்புப் பிரிவுகள்' (Internal Vigilance Cells) அமைக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்ததுள்ளது.
டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் (லஞ்சம் கேட்கும் அல்லது வாங்கும் ), முறையற்ற நடத்தை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற நெறிமுறையற்ற செயல்பாடுகள் தொடர்பான புகார்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அவை குறித்து விசாரணை நடத்தவும் இந்தப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி தமிழ்நாட்டில் லஞ்சம் கேட்கும் அல்லது வாங்கும் அல்லது முறைகேடுகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது புகார் அளிக்க அனைத்து மாவட்ட மற்றும் மாநகர வாரியாக 'உள் கண்காணிப்புப் பிரிவு' (Internal Vigilance Cell) சார்பில் தனித்துவமான வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஊழல், முறையற்ற நடத்தை, அதிகார துஷ்பிரயோகம் அல்லது காவல்துறைப் பணியாளர்களின் பிற நெறிமுறையற்ற செயல்பாடுகள் குறித்த புகார்களை, பொதுமக்கள் தங்கள் மாவட்டம் அல்லது நகரத்திற்கான உள்-கண்காணிப்புப் பிரிவு எண்களில் தெரிவிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண் மூலம் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள் மீது நியாயமான, பாரபட்சமற்ற, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கை எடுக்கப்படுறதா என்பதை, டி.ஜி.பி., முதல் எஸ்.பி., வரையிலான காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை மாநகர பொதுமக்கள் 78717 23000 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார்களைத் (போலீஸ் புகார்) தெரிவிக்கலாம் என்றும் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டம், மாநகரம் வாரியாக புகார் அளிக்க வேண்டிய வாட்ஸ்அப் எண்கள்:
சென்னை மாநகரம்- 7871723000
தாம்பரம் மாநகரம்- 6374514428
ஆவடி மாநகரம்- 9840018110
சேலம் மாநகரம்- 9626207262
திருப்பூர் மாநகரம் - 8438761616
திருச்சி மாநகரம்- 7871202100
மதுரை மாநகரம்- 8300021100
கோவை மாநகரம்- 8148919100
நெல்லை மாநகரம்- 9952540100
காஞ்சிபுரம் - 9940031700
செங்கல்பட்டு - 9500779100
திருவள்ளூர் - 9498181359
வேலுார் - 8807258532
ராணிப்பேட்டை - 7305877732
திருப்பத்துார் - 9600903373
விழுப்புரம் - 9944889161
கள்ளக்குறிச்சி - 8870353799
கடலுார் - 9677100551
திருவண்ணாமலை - 7695878100
திருச்சி - 7448878100
புதுக்கோட்டை - 9500550543
கரூர் - 8807709299
பெரம்பலுார் - 8903631122
அரியலுார் - 7904932100
தஞ்சாவூர் - 9840438678
திருவாரூர் - 9944336551
நாகப்பட்டினம் - 9489901106
மயிலாடுதுறை - 9087755100
கோயமுத்துார் - 7540083100
ஈரோடு - 9655220100
திருப்பூர் - 9042227100
நீலகிரி - 9789800100
சேலம் - 96293 90203
நாமக்கல் - 9566637105
தர்மபுரி - 7604904492
கிருஷ்ணகிரி - 9025552100
மதுரை - 9003719004
விருதுநகர் - 9600975100
திண்டுக்கல் - 7904300491
தேனி - 9626207262
ராமநாதபுரம் - 7904114100
சிவகங்கை - 7598788108
திருநெல்வேலி - 9498101740
தென்காசி - 9385678039
துாத்துக்குடி - 9489929270
கன்னியாகுமரி - 7358776100