இனி தனித்தனியாக மெசேஜ் அனுப்ப வேண்டாம்! வாட்ஸ்அப்-பின் புதிய வசதியால் குரூப் அட்மின்கள் ஹேப்பி!

Whatsapp
Whatsapp
Updated on

வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்ட முந்தைய மெசேஜ்களை(group history) பார்க்கும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது.

வாட்ஸ்அப் குழுக்களில் புதிதாக சேருப்பவர்கள், தாங்கள் இணைவதற்கு முன்பு பகிரப்பட்ட முந்தைய செய்திகளை பார்க்கும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் குழுவில் சேரும் புதிய நபர் கடந்த 24 மணி நேரத்தில் பகிரப்பட்ட 25 முதல் 100 செய்திகள் வரை பார்க்க முடியும்.

புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பொழுது அட்மின்கள் அல்லது உறுப்பினர்கள் இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். பகிரப்படும் பழைய மெசேஜ்களும் மற்ற மெசேஜ்களைப் போலவே எண்ட்-டு- எண்ட் என்க்ரிப்ட்(end-to-end encrypted) செய்யப்பட்ட பாதுகாப்பான அம்சமாகும். செய்திகள் பகிரப்படும் பொழுது குழுவில் உள்ள அனைவரும் இதைப் பற்றிய அறிவிப்பை பெறுவார்கள். செய்திகள் பகிரப்படும் பொழுது யாருடைய பெயரில் பகிரப்பட்டது மற்றும் நேரம் போன்ற வெளிப்படைத்தன்மை நிறைந்த தகவல்கள் சாதாரண செய்திகளிலிருந்து தனித்து தெரியும்.

இந்த அம்சம் தானியங்கி அல்ல என்பதை வாட்ஸ்அப் தெளிவுபடுத்தி உள்ளது. புதிய உறுப்பினர்களுக்கு பழைய செய்திகள் தெரிய வேண்டுமா என்பதைக் குழு நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். 25 செய்திகளிலிருந்து தொடங்கி எவ்வளவு வரலாறு பகிரப்பட வேண்டும் என்பதையும் குழு நிர்வாகிகள் தேர்வு செய்யலாம். இந்த வசதியை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் குழுத் தலைவர்களிடம்(Admins) இருக்கும். குழு அட்மின்கள் இந்த அம்சத்தை குழு அமைப்புகளில்(group settings) முடக்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த அம்சம் புதிய உறுப்பினர்கள் குழுவின் முந்தைய உரையாடல்களை புரிந்து கொள்ளவும், சூழலை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. இந்த வசதி புதிய உறுப்பினர்களுக்கு பழைய செய்திகளை தனித்தனியாக அனுப்பும் சிரமத்தை குறைக்கிறது. இந்த அம்சம் உலக அளவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. பயனர்கள் தங்களது செயலியை புதுப்பிப்பதன் மூலம் இந்த வசதியை பெறலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 6 படங்கள்! ஓடிடி ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா ட்ரீட்..!
Whatsapp
logo
Kalki Online
kalkionline.com