

நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் கண்டிப்பாக இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
கோடிக்கணக்கான பயனர்களை தன்வசமாக்கி, சமூக வலைத்தளத்தில் வாட்ஸ்அப் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்டுகளை செய்து கொண்டிருக்கிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதோரை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவிற்கு மக்கள் வாட்ஸ்அப்புக்கு மக்கள் அடிமையாகி உள்ளனர். தற்போது மோசடி கும்பல் பணம் பறிப்பதற்கு வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து வருகின்றனர். அந்த வகையில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. கல்வி உதவித்தொகை பெற்று தருவதாகவும், பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாகவும் கூறி ஏமாற்றி வருகிறார்கள். அதில் ஒருவகையான மோசடி தான் தற்போது அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் ஹாய்...நான் வாட்ஸ்-அப் சப்போர்ட் பேசுகிறேன்...என்று வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பேசியும் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற மெசேஜ் வந்தால் நம்ப வேண்டாம், அந்த எண்ணை வாட்ஸ்-அப் செயலியில் பிளாக் செய்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அந்த வகையில் கோவை மாநகர காவல்துறை சமூக வலைத்தளங்களில் நடக்கும் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் மூலம் நடக்கும் புதிய மோசடி முறை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, ஹாய்...நான் வாட்ஸ்-அப் சப்போர்ட் பேசுகிறேன்...என்று வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பேசியும் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதுகுறித்து கோவை மாநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், Hi… நான் WhatsApp Support பேசுறேனு என்ற மெசேஜை யாராவது அனுப்பினால் அதை எந்த சூழ்நிலையிலும் நம்பக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களை நேரடியாக தொடர்பு கொள்வதில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய செய்திகள் மூலம் மோசடி செய்பவர்கள் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருட முயற்சிக்கின்றனர்.
வங்கி கணக்கி விவரங்கள், ஓடிபி குறீயிடுகள், பாதுகாப்பு கேள்விகளுக்கு பதில்கள் போன்ற முக்கியமான தகவல்களை பெற்று நிதி மோசடி செய்யலாம் என்பதால் இது மிகவும் ஆபத்தானது.
காவல்துறை தனது பதிவில், இத்தகைய சந்தேகத்திற்குரிய செய்திகள் வந்தால் உடனடியாக அந்த எண்ணை பிளாக் செய்து, புகார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
மேலும் வாட்ஸ்அப் மூலம் யாராவது ஏமாற்றப்பட்டால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://whatsapp.com/contact/forms/1534459096974129 என்ற முகவரியில் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலமாக நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து போதிய அறிவு இல்லாதவர்கள் இதுபோன்ற மோசடிகளில் எளிதில் மாட்டிக்கொள்கின்றனர்.
எனவே அனைவரும் இதுபோன்ற செய்திகளை கவனமாக கையாள வேண்டும் என காவல்துறை வலியுறுத்தி உள்ளது. எந்த ஒரு அதிகாரப்பூர்வ நிறுவனமும் வாட்ஸ்அப் தனிப்பட்ட விவரங்களை கேட்பதில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணில் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.