வரும் மே மாதம் முதல் சில போன்களில் வாட்ஸப் செயல்படாது என்று மெட்டா தெரிவித்துள்ளது.
இப்போது இந்தியர்களின் முதன்மையான தகவல் பரிமாறும் தளம் என்றால் அது வாட்ஸப் தான். இப்போதெல்லாம் நெட் மட்டும் இருந்தால் போதும், ரீச்சார்ஜ் செய்யாமல், வாட்ஸப்பிலேயே மெசேஜ் செய்தும் கால் செய்தும் பேசிக்கொள்கின்றனர்.
குறிப்பாக இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போன் வைத்திருக்கிறார்கள் என்பதால், வாட்ஸப் செயலியை அனைவருமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது. வாட்ஸப் செயலிக்கு பதிலாக அதற்கு இணையாக எந்த ஒரு செயலியும் இல்லை என்பதுதான் உண்மை.
இன்ஸ்டாவில் என்னத்தான் மெசேஜ் மற்றும் கால் செய்யும் வசதிகள் வந்தாலும், அது ஒரு சமூக வலைதளம் என்பதால், சிலர் பயன்படுத்துவது கிடையாது. குறிப்பாக சிறுவர்கள் பயன்படுத்த சில பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.
இப்படி அனைவருக்கும் அனைத்திலும் உதவியாக இருக்கும் வாட்ஸப்பை சில போன்களில் இனி செயல்படுத்த முடியாது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதுவும் சமீபக்காலமாக வாட்ஸப்பில் புது புது வசதிகள் வரும் சமயத்தில், இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், “மே 5, 2025 உடன் குறிப்பிட்ட மொபைல் போன்களில் whatsapp செயல்படாது. Whatsapp பயனர்களுடைய வசதிக்காக வாட்ஸ் அப்பில் சில அப்டேட்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் பழைய மொபைல் மாடல்கள் இந்த புதிய அப்டேட்டுகள் மற்றும் whatsapp முழுவதுமாக செயல்படாது.”
அதாவது IOS உடைய பழைய பதிப்புகளில் whatsapp வேலை செய்யாது. 2015 ஜனவரி 15க்கு முந்தைய IOS பதிப்புகளுக்கும் வேலை செய்யாது. ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 5S போன்ற பழைய ஐபோன்களை பயன்படுத்துபவர்களுக்கும் WHATSAPP வேலை செய்யாது.
ஏனெனில் இந்த மொபைல் போன்களை IOS 15 க்கு மேம்படுத்த முடியாது என்றும் இதனால் இந்த செயலிகள் பீட்டா வெளியீடு முடிவடைவதற்கு முன்பும் WHATSAPP சில வாரங்களுக்கு மட்டுமே வேலை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்கள் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பழைய ஐபோன் பயனர்கள் தங்கள் போனை மாற்றுவது நல்லது.