#BREAKING : விஜய்யின் 'தவெக' கட்சியின் சின்னம் இது தான் - அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Thalapathy Vijay
Thalapathy Vijay
Published on

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தல் களத்திற்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. கட்சியின் தேர்தல் சின்னத்தைப் பெறுவதற்காக, தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் ஒன்றை சில மாதங்களுக்கு முன் சமர்ப்பித்தார் .

1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த விண்ணப்பத்தில், விசில், ஆட்டோரிக்ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் தவெகவின் முதன்மை விருப்பமாக 'விசில்' சின்னம் இடம் பெற்றுள்ளது.

தவெக 'விசில்' சின்னத்தைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'பிகில்', தெலுங்கில் 'விசில்' என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், அவரது சமீபத்திய படமான 'தி கோட்' (The GOAT) படத்தில் இடம்பெற்ற 'சத்தம் பத்தாது விசில் போடு' என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தச் சின்னத்தை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிக எளிதாகக் கொண்டு செல்ல முடியும் எனத் தவெக தலைமை கருதுவதாலேயே, விருப்பப் பட்டியலில் விசில் சின்னத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

vijay
vijaysource:twitter

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com