Varisu - Thunivu
Varisu - Thunivu

யார் வின்னர்? வாரிசா ? துணிவா?

பண்டிகை நாட்களில் ஒரேயொரு முன்னணி நடிகரின் படம் மட்டும் ரிலீஸ் ஆகிறது என்றாலே கொண்டாட்டமும், கும்மாளமும் களைகட்டும். தற்சமயம், தல மற்றும் தளபதி இருவரின் படங்களும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியானதால் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் கூடியிருந்தாலும், மறுபக்கம் ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டர் ஓனர்களுக்குமே கொண்டாட்டமாக இருந்து வருகிறது என்று தான் கூற முடியும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ரேஸில் விஜய்யும், அஜித்தும் நேரிடையாக மோதியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. வம்ஷி பைடிபள்ளி இயக்கியிருக்கும் வாரிசு திரைப்படம், உணர்வு மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த ஒரு ஃபேமிலி பொழுதுபோக்கு படமாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். துணிவு திரைப்படம் ஆக்க்ஷன் திரைப்படமாக அஜித் ரசிகர்களால் கொண்டாட படுகிறது .

படம் வெளியானதில் இருந்தே வாரிசு தான் பொங்கல் வின்னர் என்று விஜய்ரசிகர்களும், துணிவுதான் இந்த பொங்கல் வின்னர் என்று அஜித் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ், ரீவியூஸ் என ஒருவரை ஒருவர் கலாய்த்து துணிவு வாரிசு என ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நேற்று வாரிசு மற்றும் துணிவு படக் குழுவினரும் அவர்களுடைய படம் தான் இந்த பொங்களின் உண்மையான வின்னர் என்று போஸ்டர்களை தயார் செய்து வெளியிட்டனர். இதனால் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆகியது.

இந்த நிலையில் தான் துணிவு மற்றும் வாரிசு வெளியாகி ஒரு வார முடிவில் அதாவது 7 நாட்கள் அடிப்படையில் ரோகினி திரையரங்கம் எந்த படம் முதலிடத்தில் உள்ளது என அதிகாரப்பூரவமாக ஒரு தகவலை தங்களுடையட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த பதிவில் ரோகினி திரையரங்கில்1வார பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் தல அஜித்துடைய துணிவு NO.1 இடத்திலும், தளபதி விஜய்யுடைய வாரிசு NO.2 இடத்திலும் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் மூன்று, நான்கு , ஐந்து இடங்களில் முறையே அவதார் 2, கனெக்ட் மற்றும் கட்டா குஸ்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இது அதிகார பூர்வ அறிவிப்பு என்பதினால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து # துணிவு # TheRealPongalWinner என பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர். இருந்த போதிலும் இனி வரும் 3 நாட்கள் விடுமுறை என்பதினால் இனிதான் ஆட்டம் சூடு பிடிக்க போகிறது என கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com