சீனாவில் வைரலாகும் சோகக் குதிரை பொம்மை - பின்னணியில் உள்ள சோக கதை..!

china toys trending
china toys trending source:Xinhua
Published on

உலகம் முழுக்க ஆங்கிலப் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டாலும் , சீனா எப்போதும் பிப்ரவரி மாதத்தில் வரும் தனது பாரம்பரிய புத்தாண்டை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறது. சீனர்கள் எப்போதும் தங்கள் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டு வேர்களுக்கும் இப்போதும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சீனப் புத்தாண்டு என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல , அவர்கள் பல நாட்கள் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். இதில் நாடு முழுக்க வண்ணமயமான கொண்டாட்டங்களும், உற்சாகமான கலைநிகழ்ச்சிகளுமே பங்கு பெறும்.

சீனப் புத்தாண்டு பிப்ரவரி 17 , 2026  அன்று பிறக்கிறது. தமிழர்களின் புத்தாண்டுகளைப் போன்றே சீனர்களும் 60 வருடங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதன்படி இந்த ஆண்டு 60 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு குதிரையின் ஆண்டாக மலர உள்ளது.

சீன ஜோதிடத்தின்படி, 12 ராசி விலங்குகளில் குதிரை மிகவும் வலிமையானதாகவும், சுதந்திரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டை கொண்டாட சிரித்த முகமுள்ள பொம்மைகளுக்கு மத்தியில், சோகமாக இருக்கும் குதிரை பொம்மை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டுள்ளது.

இந்த பொம்மை எங்கே தயாரிக்கப்பட்டது? 

சோகக் குதிரை பொம்மை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது அல்ல , சீனாவின் வர்த்தக மையமான யிவு (Yiwu) நகரில் உள்ள 'ஹேப்பி சிஸ்டர்' தொழிற்சாலையில் இது உருவானது. 

ஒரு பணியாளரின் கவனக் குறைவால் உருவாகியுள்ளது. தையல் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் குதிரையின் வாய்பகுதி தலைகீழாக தைக்கப்பட்டது. ஆனால், இந்த தவறு தான் இன்று பல மில்லியன் மக்களின் மனதைத் தொட்டுள்ளது.

தொழிற்சாலை தவறு முதல் வைரல் வரை: 

சோகமான குதிரையின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி அது பரவத் தொடங்கியது. சீனர்கள் அந்த பொம்மையை விரும்ப தொடங்கினார். அதனால் , அந்த பொம்மை சீனா முழுக்க வைரலாகி விட்டது. இதற்கு பின்னால் , உழைப்பு சுரண்டப்படும் சீனர்களின் உளவியல் காரணங்களும் உண்டு.

 கார்ப்பரேட் அடிமை சின்னத்தின் உருவமாகும் சோகக் குதிரை: 

 சீன இளைஞர்கள் தங்களின் உழைப்புச் சுரண்டலை வெளிப்படும் வகையில் , இந்தப் பொம்மையை பரவலாக்கி வருகின்றனர். இந்த அழும் குதிரையை பிழியப்படும் உழைப்பு மற்றும் சோர்வின் அடையாளமாக மாற்றியுள்ளனர். பொதுவாக இது அடிமைத்தனத்தின் முகமாக விவரிக்கப்படுகிறது. வெளியில் சிரித்துக் கொண்டு உள்ளே அழும் பணியாளர்களின் வேதனையை அது வெளிப்படுத்துகிறது.

சீனாவின் 9-9-6 வேலை கலாச்சாரம்:

சீனாவின் 9-9-6 என்ற வேலைக் கலாச்சாரம் நாடு முழுக்க பரவலாக உள்ளது. இதன்படி சீன ஊழியர்கள் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை தொடர்ச்சியாக வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு அவர்கள் 12 மணிநேர உழைப்பை கொட்டுகிறார்கள். மேலும் வாரத்தின் 6 நாட்களும் அவர்கள் பணிக்கு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளைப் போல 8 மணி நேர வேலை , வாரம் இரு நாட்கள் விடுமுறை என்ற கதை எல்லாம் அங்கில்லை. இப்போது கடின வேலை செய்யும் உழைப்பாளிகளின் மவுன எதிர்ப்பின் வடிவமாக சோகக் குதிரை பொம்மை மாறியுள்ளது.

ஒரு தொழிற்சாலை பிழையாகத் தொடங்கி, இன்று ஒரு சமூகப் போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ள இந்த சோகமான குதிரை, 2026 சீனப் புத்தாண்டின் மறக்க முடியாத அங்கமாகிவிட்டது. இதை சீனர்கள் கட்டாயம் வாங்க வேண்டிய பொருளாக வைத்துள்ளனர். இதனால் , சீனா முழுக்க சோகக் குதிரையின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: காந்தியின் கொள்கையா? காந்தி ரூபாய் நோட்டா? 'காந்தி டாக்ஸ்' முன்வைக்கும் அதிரடி அலசல்..!
china toys trending

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com