உங்களுக்கு ஹிந்தி தெரியும்... "பிஜி ஹிந்தி" தெரியுமா? – இந்தியர்கள் உருவாக்கிய புதுமையான மொழிக்கு அரசு அங்கீகாரம்!

HINDI
HINDI
Published on

மொழிப்போர் மற்றும் ஹிந்தி மொழி திணிப்பு அடிப்படையில் சமீபத்தில் வெளியான பராசக்தி படம் மீதான முரண்பட்ட கருத்துகள் இன்னும் ஓயவில்லை. பல மொழிகள் பல இன மக்கள் எனினும் ஒன்று பட்ட இந்தியாவாக ஒவ்வொரு மொழியும் பெருமைக்குரியதே எனும் பொதுவான கருத்தை நடுநிலையாளர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

ஹிந்தி மொழியின் பாரம்பரிய நாடான இந்தியாவில் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் வலம் வர சத்தமின்றி வேறொரு நாட்டில் ஹிந்தி அதிகாரபூர்வ மொழியாக பேசப்படுகிறது என்பது ஆச்சரியம் தருகிறது.ஆம். பசிபிக் பெருங்கடலில் (Pacific Ocean) அமைந்துள்ள பிஜி (Fiji) நாடுதான் அந்த ஆச்சர்யத்துக்குரியது. வியப்பூட்டும் இதன் வரலாற்று பின்னணியைப் பார்ப்போம்.

சுமார் 330க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ள ஒரு தீவு நாடுதான் பிஜி.பிஜி நாடு 1874-ல் பிரிட்டிஷ் பேரரசின் காலனி ஆனது.அப்போது பிஜியில் கரும்புத் தோட்டங்கள் (Sugarcane plantations) அதிகம் உருவாக்கப்பட்டு அதற்கான பணிக்கு மலிவான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

இந்நிலையில் தான் (1879 முதல் 1916 வரை) பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருந்து உத்தரப் பிரதேசம், பீகார், தமிழ்நாடு,ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களை (Indentured Labourers) பிஜிக்கு அனுப்பியது. இந்த முறையை “Girmit System” என்று அழைத்தனர்.

இந்த வகையில் சுமார் 60,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிஜிக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்புகள் கூறுகிறது.கரும்புத் தோட்டங்களில் , நீண்ட வேலை நேரம், குறைந்த சம்பளத்துடன்.கடுமையான கட்டுப்பாடுகள் என திணிக்கப்பட்டதால் அதை எதிர்த்து இந்திய தொழிலாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டனர்.இதன் விளைவாக 1917-ல் Girmit முறை ரத்து செய்யப்பட்டது. ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், பலர் இந்தியா திரும்பாமல் பிஜியிலேயே நிலையான குடிமக்களாகத் தங்கிவிட்டனர்.

தொடர்ந்து விவசாயம் ,வணிகம், கல்வி, அரசியல் ஆகிய துறைகளில் முன்னேறினர் . இந்தி (Fiji Hindi)

தமிழ், தெலுங்கு மொழிகளுடன் , இந்துமதம், இஸ்லாம், சீக்கியம் போன்ற மதங்களுடன் தீபாவளி, ஹோலி போன்ற கலாச்சார பண்டிகைகளையும் அங்கு விதைத்தனர் இந்தியர்கள்.

இப்படி நுழைந்த மொழிகளில் பெரும்பான்மையானதானது ஹிந்தி. பின்னர் 1997 மற்றும் 2013 களில் இந்தி மொழிக்கும் அந்நாட்டில் அதிகாரபூர்வ நிலை உண்டு என அறிவிக்கப்பட்டது. பிஜியின் அரசியலமைப்பில் புகுந்த அதிகாரபூர்வ மொழிகளாக English (ஆங்கிலம்), Fijian (iTaukei) மற்றும் Hindi (இந்தி) — என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சீனாவில் வைரலாகும் ‘Are You Dead?’ ஆப்..! அந்த app-ல் என்ன இருக்கு தெரியுமா..?
HINDI

பிஜியில் பேசப்படும் “Fiji Hindi” (அல்லது Fijian Baat) என்பது இந்தியாவில் பேசப்படும் தரமான ஹிந்தியுடன் ஒத்ததாக இல்லாமல், அங்கு உள்ள இந்திய வம்சாவளியினரின் மொழிகளின் கலவையாக உருவானதாகும். அதாவது Awadhi, Bhojpuri போன்ற வட இந்திய மொழிகளும், ஆங்கிலமும், பிஜி உள்ளூர் மொழிகளும் சேர்ந்து மாற்றப்பட்ட வடிவமாகவே ஹிந்தி உள்ளது.

இந்திய பிரதமர்கள் பிஜியை “Extended Indian Family” என்று குறிப்பிடுவது உண்டு. காரணம் இன்று பிஜியில் இருக்கும் 35–40% இந்திய வம்சாவளியினர். இந்நிலையில் இந்தியா – பிஜி இடையே தூதரக உறவு, கல்வி, கலாச்சார, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நாடு முழுவதும் 17 கோடி வாகனங்களின் பதிவு ரத்து..? உங்கள் வாகனம் தப்ப இதை செய்யுங்க.!
HINDI

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com