பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடத் தயாரா? மம்தாவுக்கு பாஜக தலைவர் சவால்!

Ready to contest against PM Modi in Varanasi? BJP leader challenges Mamata
Ready to contest against PM Modi in Varanasi? BJP leader challenges Mamatahttps://bangla.latestly.com

‘2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடத் தயாரா?’ என்று கேட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக மகளிரணி தலைவர் அக்னிமித்ரா பால் சவால் விடுத்துள்ளார்.

‘உங்களுக்கு பிரதமராகும் விருப்பம் இருக்கிறது அல்லவா?  அப்படியானால் வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும்’ என்றும் அக்னிமித்ரா பால் கூறி உள்ளார்.

தில்லியில் நடைபெற்ற இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணியின் 4வது கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, “வரும் மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், நட்சத்திர தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிட்டதால் அங்கு பிரியங்கா போட்டியிடுவது கைவிடப்பட்டது. இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி கூட்டத்துக்குப் பின்னர் பேசிய மம்தா பானர்ஜியிடம், பிரியங்கா காந்தி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது பற்றி கேட்டபோது, “கூட்டத்தில் நாங்கள் விவாதித்த அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
2023ல் இந்தியர்கள் அதிகம் சுற்றுலா சென்ற நாடு எது தெரியுமா?
Ready to contest against PM Modi in Varanasi? BJP leader challenges Mamata

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கான எதிர்ப்பை வலுப்படுத்த இந்தியா எதிர்க்கட்சி  கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சைத் தொடங்கவும், ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை உருவாக்கவும், தேர்தல் அறிக்கையை இறுதி செய்யவும் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி கூட்டத்தின்போது, டிசம்பர் இறுதிக்குள் தொகுதி பங்கீடு பற்றி இறுதி செய்யுமாறு கூட்டணிக்கட்சிகளை மம்தா வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, மம்தா பரிந்துரைத்திருந்தார். ஆனால், ‘முதலில் தேர்தலில் வெற்றி பெறுவோம். பிரதமர் யார் என்பதை பின்னர் முடிவு செய்துகொள்ளலாம்’ என்று கூறி, கார்கே அதை மறுத்து விட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com