அடுத்த 30 நாட்களில் இதெல்லாம் நடக்கும்? பகீர் கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு..!!

பாபா வங்காவின் பல்வேறு கணிப்புகள் உண்மையான நிலையில் தற்போது வரும் செப்டம்பர் 30-ம்தேதிக்குள் உலகில் பல்வேறு மாற்றங்களை நிகழ இருப்பதாக கூறியிருக்கிறார்.
Baba Vanga
Baba Vanga
Published on

தீர்க்கதரிசி பாபா வங்காவின் பல்வேறு கணிப்பு உண்மையான நிலையில் தற்போது வரும் செப்டம்பர் 30-ம்தேதிக்குள் உலகில் பல்வேறு மாற்றங்களை நிகழ இருப்பதாக கூறியிருக்கிறார். பாபா வங்காவின் பல்வேறு கணிப்புகள் இதுவரை ஒவ்வொன்றாக பலித்து வரும் நிலையில், வரும் நாட்களில் அவர் என்ன மாற்றங்கள் நடக்கும் எனக்கூறியுள்ளார் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

சிம்மராசியில் கடந்த ஆக்ஸ்ட் 17-ம்தேதி சூரியன் குடியேறிய நிலையில் வரும் செப்டம்பர் 17-ம்தேதி வரை அங்கு சஞ்சாரம் செய்யப்போகிறார். சூரியன் வரும் 30 நாட்கள் வரை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் வேளையில் உலகெங்கிலும் பல்வேறு மாற்றங்களை நிகழ இருப்பதாக பாபா வங்கா கணித்துள்ளார். இந்த காலகட்டத்தில் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் படிப்படியாக குறையும் எனவும், ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போர் பிரச்சனைகள் குறைந்து அமைதி உண்டாகும் எனவும் நம்பப்படுகிறது.

இதற்கு முன் பாபா வங்கா, 2025-ம் ஆண்டு முற்பகுதியில் பல நாடுகளில் போர் பதற்றங்கள், ராணுவ தாக்குதல், பொருளாதார பிரச்சனைகள், வெள்ளப்பெருக்கு போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்று கணித்து கூறியிருந்தார். அதேபோல் இந்தியா-பாகிஸ்தான், காசா மீது இஸ்ரேல், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களும், டிரம்ப் பல நாடுகள் மீது விதித்த அதிகப்படியான வரியால் பொருளாதார பிரச்சனைகளும், அமெரிக்கா, சீனாவில் பெரும் வெள்ளப்பெருக்கு, கனடாவில் காட்டுத்தீ, ஆஸ்திரேலியாவில் புயல் தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் பாபா வங்காவின் கணிப்பை உறுதிபடுத்தியது.

இதையும் படியுங்கள்:
மியான்மரில் இயற்கையின் கோரதாண்டவம் - பாபா வங்கா கணித்தது பலித்ததா?
Baba Vanga

பாபா வங்காவின் கணிப்பு இந்தியாவையும் விட்டு வைக்காமல் வட இந்தியாவிலும் - உத்தரப்பிரதேசம் , உத்தரகாண்ட், பீகார், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, பெங்களூரு, மும்பை போன்ற பகுதிகள் கடும் வெள்ளப்பெருக்கில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து, அவர்களை கடும் சிரமங்களுக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், கடந்த 17-ம்தேதி நிகழ்ந்திருக்கும் சூரியன் பெயர்ச்சி, நேர்மறையான ஆற்றலை உலகெங்கிலும் பரவ செய்து அமைதியை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போருக்கான முடிவுகள் இந்த காலக்கட்டத்தில் தெரியும் எனக்கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக டிரம்ப் ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் விரைவில் அமைதி பிறக்கும் என கணிப்புகள் கூறுகின்றன.

அதேபோல் பாபா வங்காவின் கணிப்பின்படி இந்தாண்டு பிற்பகுதியில் மழையால் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கு போன்ற பிரச்சனைகளை முடிவுக்கு வரும் என்று கூறியுள்ள நிலையில் அதை நிஜமாக்கும் வகையில், ஜோதிடத்தில் சாதகமான கிரக நிலை மாற்றங்கள் தற்போது நிகழ்ந்திருப்பதாக ஜோதிட நிபுணர்களும் கணித்துள்ளனர்.

அதாவது ஜோதிடர்கள் கணிப்பின்படி, சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது, சூரியன் நீரால் உண்டாகும் இயற்கை சீற்றங்களை தடுப்பார் என்று நம்பப்படுவதால், இந்தியாவில் மட்டுமில்லாமல், உலக நாடுகளிலும் வெள்ளம், மழை போன்ற நீர் சம்பந்தப்பட்ட இயற்கை சீற்றங்கள் முடிவுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

பாபா வங்காவின் கணிப்பின்படி இந்தாண்டு பிற்பகுதியில் இயற்கை சீற்றங்களுக்கான வாய்ப்பு குறைந்தாலும், பூமி தொடர்பான பாதிப்புகள் சில வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் ஜோதிட நிபுணர்களும் பூகம்பம், நிலச்சரிவு போன்ற சில பிரச்சனைகள் இந்தியா மற்றும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
2025-ல் நடக்கும் பேரழிவு? - பாபா வங்கா கணித்தது இதுதானா?
Baba Vanga

பாபா வங்காவின் கணிப்பை உறுதிபடுத்தும் வகையில் கிரக நிலை மாற்றமும் தற்போது நடந்துள்ளது. அதேசமயம் அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரத்தில் நிகழவிருக்கும் சந்திர கிரகணம் இந்தியா உட்பட சில ஆசிய நாடுகளில் பூகம்பம், நிலச்சரிவு போன்ற பிரச்சனைகளை கொண்டு வரும் என நம்பப்படுகிறது.

பாபா வங்காவில் பல கணிப்புகள் பலித்துள்ள நிலையில் தற்போது அவர் கணித்துள்ளவை நடக்கும் பட்சத்தில் அதிக உயிர்பலி ஏற்படுமே என்ற அச்சம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com