மே மாதம் ரூ.1000 வருமா? வராதா? - தமிழக இல்லத்தரசிகளின் தற்போதைய கேள்வி..!!

1 கோடியே 31 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருக்கிறார்கள்.
மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமை தொகை
Updated on

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து திறம்பட செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண், பிங்க் ஆட்டோ போன்ற புதிய, புதிய திட்டங்களை கொண்டு வந்து மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் கடந்த 2023 செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 13 லட்சம் மகளிரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15-ம்தேதி ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து விடுபட்ட பெண்களுக்கு உதவி தொகை கிடைக்க வேண்டும் என்ற உரிய நோக்கத்தில் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1.31 கோடி மகளிருக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000யை தமிழக அரசு செலுத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்:
மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா? தமிழக பெண்களுக்கு 'ஸ்வீட் நியூஸ்' சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி!
மகளிர் உரிமை தொகை

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில், பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் அவர்களுடைய வங்கிக்கணக்கில் 1000 ரூபாய்க்கு பதிலாக ரூ.5000 பணம் வரவு வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் மகளிர் உரிமைத் தொகையை வழங்க முடியாது என்பதால் முன்கூட்டியே ரூ.3000 வழங்கப்பட்டதாகவும், கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2000 சேர்த்து வழங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதுமட்டுமின்றி, 2026 தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்தால், ரூ.2 ஆயிரமாக உரிமைத்தொகை உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம்தேதி முடிந்து வரும் 4-ம்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மே மாதம் மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் தமிழக மகளீர் மனதில் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் மகளிர் உரிமைத் தொகையை வழங்க முடியாது, என்பதால் தான் அதாவது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கு 3000 ரூபாய் என்றும் கோடைகால சிறப்பு தொகுப்பாக 2000 ரூபாய் என்றும் மொத்தம் 5000 ரூபாய் மகளிர் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

ஏற்கனவே கோடைகால சிறப்பு தொகுப்பாக ரூ2000 வழங்கப்பட்டு விட்டதால் மே மாதம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது என்றும் ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவே ஆட்சி அமைக்கும் பட்சத்தில் ஜூன் மாதத்தில் இருந்து பழையபடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படலாம். அதுமட்டுமின்றி ஏற்கனவே ஆட்சி அமைந்தவுடன் முக ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதால் ஜூன் மாதத்தில் இருந்து பழையபடி மகளிர் உரிமைத்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆனால் அதேசமயம் ஆட்சி மாற்றம் நடக்கும்பட்சத்தில், அதாவது அதிமுக குலவிளக்கு திட்டத்தில் பெண்களுக்கு ரூ.2000 வழங்கும் என்றும், தவெக ரூ.2500 வழங்கும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஒரே நாளில் ரூ.5,000 மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி!
மகளிர் உரிமை தொகை

இதில் எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், பதியேற்பு, அமைச்சரவை கூட்டம், திட்டங்களுக்கு ஒப்புதல், நிதி விடுவிப்பு என அனைத்தும் முடிந்து வர ஒருமாதம் ஆகுமென்பதால் ஜூன் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com