

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்களின் வரவேற்பை பெற்று தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது தவெக. ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை வேண்டி திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், காங்கிரஸ் 5 இடங்களுடன் திமுக கூட்டணியில் இருந்து விலகி ஆதரவு தர திமுக கூட்டணியில் இருந்து இரண்டு இடங்களை வென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நீண்ட காத்திருப்பு க்குப் பின்னர் தங்கள் நிபந்தனையற்ற ஆதரவை தவெகவிற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தவெக வின் அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து மீண்டும் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆலோசனை செய்து வருகிறார் . காரணம் அமைச்சரவையில் சேர தவெக வெளிப்படையாக அழைத்துள்ளது என்பதுதான்.
செய்தியாளர்களே தற்போது சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பேசியதாவது,
*திமுக கூட்டணியில் இருந்ததால் தவெக அழைத்த போது நிபந்தனையற்ற ஆதரவு என்று அக்கட்சிக்கு ஆதரவு தந்தோம்.தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெற முதலமைச்சர் விஜய் விருப்பம் என என்னை சந்தித்தபோது கூறியிருந்தார் . இதை உறுதி செய்துள்ளது அமைச்சரவையில் இடம் பெற அழைப்பு அக்கட்சியின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விடுத்த அழைப்பு.
அமைச்சரவையில் இடம் பெற ஆதவ் விடுத்த அழைப்புக்கு நன்றி. அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து விசிக ஆலோசித்து வருகிறது விசிக அமைச்சரவையில் இடம் பெற உயர்மட்ட நிர்வாகிகள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
என்னை நேரில் சந்தித்தபோது அமைச்சரவையில் சேர முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் . பொதுச்செயலாளர்கள், பொருளாளர் உட்பட நிர்வாகிகள் கலந்து ஆலோசித்த பின் முடிவு தெரிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து இரண்டு தொகுதிகளை வென்று ஏகபட்ட எதிர்பார்ப்பிற்கு பின் நிபந்தனையற்ற ஆதரவை வெளியே இருந்து தவெக விற்கு வழங்கி ஆட்சியமைக்க உதவியது விசிக . ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை துணை முதலமைச்சராக நியமிக்கும் எண்ணம் தவெக-விற்கு இருந்ததாக கூறப்படும் நிலையில் அக்கட்சியை அமைச்சரவையில் சேர தவெக வெளிப்படையாக அழைக்கிறது .
இந்நிலையில், வெளியில் இருந்து ஆதரவு என கடந்த ஒன்பதாம் தேதி எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்ய உள்ளதாகவும் திருமாவளவன் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசிக, ஐ.யூ.எம்.எல் இரண்டு கட்சிகளும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் விஜய் விரும்புவதாக ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்துள்ளார்.அதே சமயம் அதிமுகவின் சிவி சண்முகம் போன்றவர்களுடன் தோழமை மட்டுமே எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது..