இந்திய நாட்டில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் என்று ஆஸ்திரேலியா பெண் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
இந்தியா மிகப்பெரிய நாடு என்பதால், ஏராளமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. இதனால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவையும் இந்திய கலாச்சாரங்களையும் பார்க்க விரும்புகின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் உலகம் முழுக்க நமது நாட்டைப் பற்றி எழுதவும் பகிரவும் செய்கிறார்கள்.
அப்படிதான் உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெக் மெக்கோல் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதாவது இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னர் பல நாடுகளில் எடுக்கப்பட்ட இன்டர்வியூக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. அதாவது உலகத்திலேயே பாதுகாப்பில்லாத நாடு எது என்று ஒவ்வொரு நாட்டு மக்களிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர்கள் நிறைய பேர் இந்தியா என்று கூறுகிறார்கள். இதுபோல பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இதனால், இந்தியா இப்படி ஒரு நாடா என்று உலக மக்கள் ஆச்சர்யப்பட்டனர். அதேபோல் வெளிநாட்டு பெண்கள் இந்தியாவிற்கு தனியாக வரவே அஞ்சுகின்றனர்.
அந்தவகையில் அந்த ஆஸ்திரேலிய பெண் கூறியதாவது, “இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தனியாக சுற்றுலா சென்ற அவர், தனது பயணங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து தனியாக இந்தியாவுக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாக குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. என்று பேசினார்.
மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இரவில் தனியாக நடந்து சென்றதாகவும், தமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்திய உணவு வகைகளுக்காக ஏங்குவதாக தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான நகரங்கள், யுனெஸ்கோ புராதன சின்னங்களை பார்த்து வியந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது உலகை சுற்றும் பயணிகளுக்கு மிகவும் தைரியத்தை கொடுத்திருக்கிறது. மேலும் இந்தியா மேல் உள்ள கறையை நீக்கியிருப்பதாக கருத்துக்கள் வருகின்றன.