

சர்வதேச அளவில் நாட்டு உச்ச அரசாங்க நிர்வாகி பெறக்கூடிய சம்பளப்பட்டியல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்டியலில் பல்வேறு நாட்டு தலைவர்கள் அதிக சம்பளம் பெற்று நாட்டினை நிர்வாகம் செய்கின்றனர். அதே நேரம் குறிப்பிட்ட நாட்டு அரசியல் நிர்வாகிகளுக்கு மிகவும் சாதாரணமான சம்பளமே தரப்படுகிறது. இந்த பட்டியலில் எந்த நாட்டின் அரசியல் தலைவர் அதிக ஊதிய பெறுகிறார் ? என்பதையும், இந்தியாவின் முதன்மை நிர்வாகியான பிரதமர் எவ்வளவு ஊதியம் பெறுகிறார்? என்பதையும் அறிவது அவசியம்.
ஒரு நாட்டின் அரசியல் தலைவரின் அதிகபட்ச சம்பளம் , அந்த நாட்டின் பொருளாதார வளம் , வருமானம், செல்வ செழிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு வழங்கப்படுகிறது. ஒரு சில நாடுகள் தங்களது கொள்கையாக அரசியல் உச்ச நிர்வாகிக்கு, மிக அதிக சம்பளத்தை கொடுக்கிறது. அதன் நோக்கம் அதிக சம்பளம் பெறுவதால் , அவர்களுக்கு ஊழல் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது என்பதுதான். ஒரு சில வளரும் நாடுகள் தங்கள் நாட்டின் உச்ச நிர்வாகிக்கு , அரசு ஊழியர்களுக்கு இணையான மாத சம்பளத்தையே தருகின்றன.
பெரும்பாலும் நாட்டின் உச்சத் தலைவரின் சம்பள வரம்பு, அந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலையை பிரதிபலிப்பதாக அமைகிறது. அதே நேரம் குறிப்பிட்ட சில நாடுகளின் தலைவர்களுக்கு சாதாரண சம்பளமே வழங்கப்பட்டாலும், அவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளுக்கு ஆகும் செலவுகள், மற்ற நாட்டின் நிர்வாக தலைவர்களின் சம்பளத்தை விட மிகவும் அதிகமாகவும் இருக்கின்றது.
உலகின் அதிக சம்பளம் பெறும் தலைவர்கள் பட்டியலில் சிங்கப்பூர் பிரதமர் முதலிடத்தில் இருக்கிறார். சிங்கப்பூர் அந்த நாட்டின் அரசியல் கொள்கைப்படி, அதிக சம்பளத்தை தருவதால், பிரதமர் பதவியில் இருப்பவர் ஊழல்களில் ஈடுபட மாட்டார் என்று நம்புகிறது. தற்போதைய சிங்கப்பூர் பிரதமரான லாரன்ஸ் வோங் உலகின் அதிக சம்பளம் பெறும் அரசாங்கத் தலைவராக முதல் இடத்தில் இருக்கிறார். அவரது ஒரு மாத ஊதியம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹26.9 கோடி (US$2.85 மில்லியன்) ஆகும்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹாங்காங் தலைமை நிர்வாகி டெனால்ட் செங் இருக்கிறார். இவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்க தலைவராக இருந்தாலும், சீனாவினால் நியமிக்கப்பட்ட அரசாங்க உயர் அதிகாரியாக இருக்கிறார். ஆனாலும் சீன அதிபரின் சம்பளத்தை விட, அந்த நாட்டின் சிறிய பகுதியாக இருக்கும் ஹாங்காங் நிர்வாகியின் சம்பளம் அதிகமாக இருப்பது, வியப்பிற்குரியதாக உள்ளது. இவரது மாத ஊதியம் இந்திய மதிப்பில் ₹6.8 கோடியாக (US$719,000) உள்ளது.
மூன்றாவது இடத்தில் இருக்கும் சுவிஸ் கூட்டமைப்பு தலைவர் கய் பெருமிலன் ₹5.7 கோடி (US$606,000) மாத ஊதியம் பெறுகிறார். சுவிஸ் நாடு பொருளாதார அளவில் மிகவும் சிறப்புடன் இருப்பதால் அந்த நாட்டு அரசியல் உச்ச நிர்வாகிக்கு உயர்ந்த சம்பளம் வழங்கப்படுகிறது.
நான்காவது இடத்தில் உலகின் உச்ச பொருளாதார சக்தியாக இருக்கும் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்படும் ஊதியம் இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ₹3.8 கோடி (US$400,000) மாத ஊதியமாக பெறுகிறார். ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து பிரதமர் ஆன்டி புர்ஹாம் ₹2.2 கோடி(US$230,000)
மாத ஊதியம் பெறுகிறார். இங்கிலாந்தின் பொருளாதார சூழ்நிலைகள் தற்போது சரிவில் இருந்தாலும் , பிரதமரின் ஊதியம் நிலையாக இருக்கிறது.
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் பெறும் ஊதியம் இடம் பெறவில்லை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாத ஊதியமாக ₹1.66 லட்சம் என்ற குறைவான தொகையை பெற்று வருகிறார். இந்த ஊதியத்தொகை மில்லியன் கணக்கான இந்தியர்கள் மாத வருமானமாக பெறக்கூடிய தொகையாகும்.