நாளை உலகப் பட்டினி தினம்: தென்னகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் மதிய உணவுக்கு ஏற்பாடு!

நாளை உலகப் பட்டினி தினம்: தென்னகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் மதிய உணவுக்கு ஏற்பாடு!
Published on

லகப் பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை எளியோருக்கு ஒரு வேளை மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உலகம் முழுவதும் மே 28ம் தேதி ‘உலகப் பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் பட்டினியால் வாடும் ஏழை மக்களைப் பற்றிய விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் சொல்லுக்கிணங்க, உலகப் பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாகவும் பட்டினி தினத்தை முன்னிட்டு ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம், பசியால் வாடும் ஏழை மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினைப் போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மூலம் இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com