உலக கட்டிப் பிடி தினம் - ஜனவரி 21 (International Hugging Day)!

உலக கட்டிப் பிடி தினம் - ஜனவரி 21 (International Hugging Day)!

வசூல் ராஜா படத்தில் கமலஹாசன் சொல்லித் தரும் கட்டிப்பிடி வைத்தியத்தைப் பார்த்திருப்பீர்கள். உண்மையிலேயே இதை அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே செய்து வந்தவர் 92 வயதான அன்னா செப்ரிங் என்ற பெண்மணி. மக்களை அணைப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும்.

இவர் ஒரு காலத்தில் மலையேறுபவராகவும் புகைப்படக்காரராகவும் இருந்தவர். ஜனங்களை நேசிப்பவராகவும் நேர்மறைச் சிந்தனைகள் நிரம்பியவராகவும் இவர் இருந்தார். புன்னைகையுடன் மக்களை அணைப்பது இவரது ஸ்பெஷாலிடி!

சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் அடகாமா பாலைவனத்தின் தாமிரச் சுரங்கம் ஒன்றில் , 5.8.2010 அன்று தரைக்குக் கீழே 700 மீட்டர் ஆழத்தில் 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 69 நாட்கள் அவர்களை ஒருவாறு மீட்டுத் தரைப்பகுதிக்குக் கொண்டு வந்தார்கள். இவர்கள்தான் உலகத்திலேயே அதிகம் பேரால் அணைக்கப்பட்டவர்களாம்!

1986 ஜனவரி 21 முதல் இந்தக் ’கட்டிப்பிடி நாள்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாளாகும். பின்னர் இந்நாள் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளுக்கும் பரவியது. கட்டிப்பிடிப்பதன் மூலம் ரத்தத்தில் ஆக்ஸிடாக்சின் அளவு கூடி இரத்த அழுத்தம் குறைவதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com