ஹாலோவீன்
ஹாலோவீன்

தென் கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் சோகம்!

கிழக்காசிய நாடான தென் கொரியாவின் சியோல் மாவட்டத்தில் இடாவோனில் அகால மரணமடைந்து பேயாக திரியும் முன்னோர்களை சந்தோஷப்படுத்தும் வகையில், அக்., 31 ம் தேதியை 'ஹாலோவீன் ' திருவிழாவாக கொண்டாடப்பட்டது . இதனை அமெரிக்கா உட்பட பல நாடுகளில் கொண்டாடுகிறார்கள்.

தென் கொரியாவின் இயோல் மாவட்டத்தில், 'ஹாலோவீன்' திருவிழா கொண்டாட்டத்தின் போது, குறுகிய சாலையில் நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், 150 இளைஞர்கள் மிதிபட்டு உயிரிழந்தனர்.

ஹாலோவீன் திருவிழா
ஹாலோவீன் திருவிழா

மிகவும் குறுகிய சாலைகள் உள்ள பகுதியில் நடந்த இந்த திருவிழாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரன கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வெளியேற வழியில்லாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து, தப்பிக்க மக்கள் முயற்சித்தனர்.

இதில், கீழே விழுந்தவர்கள் மிதிபட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், 150 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இடாவோன் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர, 82 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 19 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஹாலோவீன் விபத்து
ஹாலோவீன் விபத்து

தென் கொரிய வரலாற்றில் மிகவும் மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.

இடாவோனில் நடந்த இந்த 'ஹாலோவீன் ' திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த இடத்தில் மலர்கொத்து வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
Kalki Online
kalkionline.com