அடிக்கடி கொட்டாவி வருதா? முதல்ல இதப் படிங்க…

அடிக்கடி கொட்டாவி வருதா? முதல்ல இதப் படிங்க…

ழக்கமாகக் கொட்டாவி வருவது அனைவருக்கும் இயற்கையான நிகழ்வு தான். கொட்டாவி என்பது தன்னிச்சையாக வாயைத் திறந்து, ஆழ்ந்த மூச்சை இழுத்து, நுரையீரலில் காற்றை நிரப்பும் செயலாகும். இதற்கு வேறு எதுவும் குறிப்பிட்ட காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போதாவது வந்தால் பரவாயில்லை, அடிக்கடி வந்தால்? கண்டிப்பாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். தூக்கமின்மை, அதிக சோர்வால் கொட்டாவி வரலாம். நம்மில் யாரும் நாள் முழுக்க கொட்டாவி விடுவதில்லை. ஒருவேளை அடிக்கடி கொட்டாவி வந்தால் அதற்கு வலுவான காரணம் இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

அடிக்கடி கொட்டாவி வருவதற்கான சரியான காரணம், நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சில உடல் நலப் பிரச்னைகளால் ஏற்படுகிறது. தூக்கமின்மை, சோர்வு, மனஅழுத்தம், பதற்றம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற தூக்கக் கோளாறுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள், நீரிழப்பு, உடல் வலிகள், சுவாச பிரச்னைகள் ஆகியவை கொட்டாவி வர முக்கியக் காரணங்கள். 

தினசரி ஏதேனும் மருந்து உண்பதால் உங்களுக்கு அதிக கொட்டாவி வந்தால், அந்த மருந்தை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு நாளுக்கு தொடர்ந்து 7 முதல் 8 மணி நேரம் நன்றாகத் தூங்கவேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வர, உடல் இயக்கம் பல உடல்நலப் பிரச்னைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும். யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவை உங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும். அதை பின்பற்றுங்கள். காபி, டீ, மது அருந்துவதை விட்டுவிடுங்கள். இரவில் செல்போன், லேப்டாப் ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களை தூரமாக வைத்துவிட்டு நன்றாக உறங்குங்கள். 

அடிக்கடி கொட்டாவி வருபவர்களுக்கு, வலிப்பு அல்லது கல்லீரல் செயலிழப்பு ஆகிய தீவிர மருத்துவ பிரச்னைகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். கொட்டாவி அதிகமாக வருவதாக உணர்ந்தால், மருத்துவரை அணுகி உடனே பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அதிகப்படியான கொட்டாவி எரிச்சலை தந்தாலும், உடல் உங்களிடம் ஏதாவது சொல்ல முயற்சிக்கிறது என்பதை அறிகுறியாகவே கொட்டாவியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com