
புதுக்கோட்டை மாநகராட்சியில் தினசரி 70 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகின்றன. இதில்42 டன் மக்கும் குப்பைகளும் 28 டன் மக்காத குப்பைகளும் அடங்கும். இந்த குப்பைகள் புதுக்கோட்டையிலுள்ள நுண்கலவை இயந்திரம் மூலமாக உரமாக்கப்படுகின்றன.பின்னர் இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாகவும் மானிய விலையிலும் அவை வழங்கப்பட்டு வருகின்றன.
மக்காத குப்பைகளை விலை போகின்ற குப்பை, விலை போகாத குப்பை இரண்டு வகையாக பிரிக்கின்றார்கள். விலை போகும் குப்பைகளான பிளாஸ்டிக் பாட்டில், கண்ணாடி பாட்டில், இரும்பு, தகரம் போன்றவற்றை தூய்மைப் பணியாளர்கள் பிரித்தெடுத்து, வாரம் ஒரு முறை நகரத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனையாளர்களிடம் அவற்றை அன்றைய சந்தை விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதில் வரக்கூடிய தொகை முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகிறது. அடுத்ததாக விலை போகாத மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் 10 முதல் 12 டன் வரையில் சேருகின்றன.
இது அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு தினந்தோறும் லாரிகள் மூலமாக எரிபொருளுக்கு ஊடு பொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 200 முதல் 250 டன் வரை இந்த பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன
புதுக்கோட்டை குப்பையில்லா தூய்மையான நகரமாகவும், பொது சுகாதார கேடுகள் இல்லாத நகரமாக விளங்க வேண்டும் என்பதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் இது போன்ற நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தொடர்ந்து எடுத்து வருகிறது.இத்திட்டம் மேலும் வெற்றி பெற பொது மக்கள் மாநகராட்சி பணியாளர்களிடம் மட்டுமே தங்கள் வீட்டுக் குப்பைகளை கொடுக்க வேண்டும்.பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளை வீசுவதையும், கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
குப்பை பிரிக்கும் இயந்திரம் நாள் ஒன்றுக்கு இருநூறுடன் அளவுக்கு உலர்ந்த அதாவது மக்காத குப்பைகளையும் ஈரமான அதாவது மக்கும் குப்பைகளையும் பிரிக்கிறது. பிறகு பிளாஸ்டிக் மீண்டும் தூளாக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு அலமாரிகள் நாற்காலிகள் செய்ய பயன்படுத்தப்படும்.
இப்பணியில் நிபுணத்துவம் பெற்றவர் நிவேதா ஆவார்.இவரின் நேரடி தொடர்பின் வாயிலாக மாணவர்கள் குப்பைகளை பற்றியும் அதிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்து தான் இந்த சாமான்கள் செய்யப்படுவது குறித்தும் கற்றுக் கொள்கின்றனர். அதேசமயம் தனது கண்டுபிடிப்பிற்காக பல்வேறு விருதுகளை நிவேதா பெற்று இருப்பதன் மூலம் சர்வதேச கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். இத்திட்டத்தை தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் அவரின் குப்பை பிரிக்குக் இயந்திரம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
வெறும் குப்பை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் குப்பையை கட்டுப்படுத்த மறுசுழற்சி செய்யக்கூடிய ஈரக்கழிவுகள் அல்லது குப்பையில் சேகரிக்கும் பணியை விருதுநகரில் ஆராய்ச்சி குப்பை வங்கி செய்து வருகிறது. இதன் ஊழியர்கள் வாரந்தோறும் ஏறத்தாழ 56 வகையான குப்பையை தரம் பிரித்து தருகிறார்கள். ஒரு கிலோவிற்கு ஆறு ரூபாய் என 300 கிலோ குப்பை சேரும்போது அதற்கான தொகையை குப்பையை தரம் பிரித்து வழங்கிய வீட்டினரின் வங்கி கணக்கில் வரவைக்கின்றனர்.ஏதாவது ஒரு விதத்துல அத ரீசைக்கிளிங் அனுப்பினாலே போதும் நம்ம உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே உண்மை.