

பாலிவுட் நடிகையும், மண்டி தொகுதி பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், தனது அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பெயர்பெற்றவர். விவசாயிகள் போராட்டம் மற்றும் இந்திய சுதந்திரம் குறித்து அவர் பேசிய சர்ச்சை கருத்து க்கள் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. சமீப காலமாக எதிர்க்கட்சிகளை விமர்சித்தும், ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் மீது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைச் செய்தும் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறார்.
இந்நிலையில் தேர்வு முறைகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை பாஜக எம்பியான கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் சென்றிருந்த கங்கனா ரனாவத், அங்கு சிஜேபி போராட்டம் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு, அதனை விமர்சித்தும் பேசினார்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - சிஜேபி' (Cockroach Janta Party - CJP) நடத்திய போராட்டத்தை விமர்சித்த பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், அழுத்தத் தந்திரங்களுக்கு மத்திய அரசு அடிபணியாது என்று கூறினார்.
நீட் வினாத்தாள் கசிவு, தகுதி தேர்வுகள் குளறுபடி ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் லடாக்கை சேர்ந்த கல்வியாளர், சமூக போராளி சோனம் வாங்சுக் 20 நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தால் சோனம் வாங்சுக் உடல் நிலை மோசமானதால் ஜூன் 18-ம்தேதி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
அதேசமயம், நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் நேற்று கூடிய நிலையில், திட்டமிட்டபடி நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணி சென்றவர்கள் மீது டெல்லி காவல்துறையும், பாதுகாப்புப் படையினரும் கடுமையான தடியடி நடத்தினர். அதேபோல், போராட்டக்காரர்களும் காவல்துறை மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று அவை தொடங்கிய முதல் நாளில், சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் சென்றிருந்த கங்கனா ரனாவத், அங்கு சிஜேபி போராட்டம் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு, அதனை விமர்சித்தும் பேசினார்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP) நடத்திய போராட்டத்தை விமர்சித்த பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், அழுத்தத் தந்திரங்களுக்கு மத்திய அரசு அடிபணியாது என்று கூறினார்.
‘யாரை பதவியில் வைக்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்குமாறு அரசாங்கத்தை உங்களால் மிரட்ட முடியாது, இந்த வகையான மிரட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று கங்கனா தெரிவித்தார்.
‘எல்லாப் பிரச்சினைகளையும் விரிவாகவும் ஆழமாகவும் விவாதிப்பதற்காகவே நமது நாடாளுமன்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வீதிகளில் கூச்சலிட்டு இடையூறு செய்வதை விட, பொதுமக்கள் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
‘கலவரம் செய்வதும், இடையூறுகளை ஏற்படுத்துவதும், இந்த முறையில் போராட்டம் நடத்துவதும் சரியல்ல. மக்கள் ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மக்களின் ஆதரவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்தான் நிர்வாகத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை கொண்டது என்றும், அரசாங்கத்தின் மீது இவ்வளவு கோபம் இருந்தால் நீங்களே தேர்தலில் நின்று வெற்றி பெற்று வரலாம்’ என்றும் போராட்டக்காரர்களுக்கு சவால் விடுத்தார்.
‘படிப்படியாக, அனைவரும் பாரதிய ஜனதா கட்சியிலும் சனாதன கலாச்சாரத்திலும் தஞ்சம் புகுவார்கள், ஏனென்றால் இது நமது சொந்தக் கலாச்சாரம், மற்ற அனைத்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டவை’ என்றார்.
மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளில்(நேற்று), நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வதற்கு முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஜந்தர் மந்தரில் கூடியிருந்த வேளையில், கங்கனா ரனாவத் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளில்(நேற்று), நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வதற்கு முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஜந்தர் மந்தரில் கூடியிருந்த வேளையில், கங்கனா ரனாவத்தின் இந்த விமர்சனம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.