வீட்டில் இரண்டு சிலிண்டர் இருக்கா? அப்போ இதைப் படிங்க! மத்திய அரசின் புதிய 'செக்'..!

இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு பயன்பாடு தொடர்பான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.
png gas
png gasAI Image
Updated on

இந்திய அரசாங்கம் "ஒரு குடும்பத்திற்கு ஒரு இணைப்பு" என்ற கொள்கையின் கீழ், கடுமையான புதிய LPG விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. எல்பிஜி சிலிண்டர் மற்றும் பிஎன்ஜி (குழாய் வழி இயற்கை எரிவாயு) இணைப்புகள் இரண்டையும் வைத்திருக்கும் வீடுகளில், இனி அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது இனி, உங்கள் வீட்டில் சமையலுக்காக குழாய்வழி எரிவாயு (PNG) மற்றும் எல்பிஜி சிலிண்டர்(LPG) இணைப்பையும் ஒரே முகவரியில் ஒன்றாக வைத்திருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் LPG சிலிண்டர்களைத் திருப்பியளிக்கக் கட்டாயப்படுத்துவது மற்றும் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்குவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு சிலிண்டர் முன்பதிவிற்கும் இடையே கட்டாயமாக நகர்ப்புறங்களில் 25 நாட்கள் மற்றும் கிராமப்புறங்களில் 45 நாட்கள் காத்திருப்பு காலத்தை நிர்ணயிப்பது ஆகியவை இந்த விதிமுறைகளின் முக்கிய அம்சங்களாகும்.

பயனர்கள் தகுதியைத் தக்கவைத்துக் கொள்ள பயோமெட்ரிக் e-KYC-ஐ முடிக்க வேண்டும்; ஆதார் இணைப்பைப் புதுப்பிக்கத் தவறினால் முன்பதிவுகள் நிறுத்தப்படலாம்.

இதையும் படியுங்கள்:
LPG Cylinder | ஒரு மாதத்தில் எத்தனை சிலிண்டர் புக் பண்ணலாம் தெரியுமா?
png gas

பாதுகாப்பு மற்றும் தடமறிதலுக்காக QR/RFID குறியீடுகள் வழியாக டிஜிட்டல் கண்காணிப்பு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, சுமார் 95 சதவீத எல்பிஜி சிலிண்டர் விநியோகங்கள், விநியோக அங்கீகாரக் குறியீடு (DAC) அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விதிமுறை எரிவாயுவின் கள்ளச் சந்தையைத் தடுக்கும் என்றும், சிலிண்டர்கள் யாருக்கு மிகவும் தேவையோ அவர்களைச் சென்றடையும் என்றும் அரசு கூறுகிறது. உலகம் முழுவதும் நிலவும் எரிசக்தி நெருக்கடியும், வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றமும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

புதிய விதிமுறைகளின்படி, பிஎன்ஜி இணைப்பு உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டு சிலிண்டர் இணைப்புகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு விநியோகஸ்தர்கள் அத்தகைய குடும்பங்களுக்கு புதிய சிலிண்டர்களை வழங்கவோ அல்லது பழைய சிலிண்டர்களை மீண்டும் நிரப்பவோ கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, இரு சேவைகளையும் வைத்திருக்கும் தனிநபர்களைத் தரவுகள் மூலம் அரசு கண்காணித்து வருகிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெயில் சுமார் 88 சதவீதம் மற்றும் இயற்கை எரிவாயுவில் 50 சதவீத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. எல்பிஜி எரிவாயுவிலும் சுமார் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக, மேற்கு ஆசியாவில், குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் அதிகரித்து வரும் பதற்றங்கள் விநியோகப் பாதைகளில் இடையூறு ஏற்படும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிராந்தியத்தில் ஏற்படும் இடையூறுகள் இந்தியாவில் எரிபொருள் கிடைப்பதையும் விலைகளையும் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக வீட்டு உபயோக எரிவாயு சேமிப்பு மற்றும் சரியான அமலாக்கத்திற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

இதுவரையில் 43,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இனி சிலிண்டர் வாங்க இதை செய்ய வேண்டும்; அரசின் புதிய உத்தரவு..!
png gas

ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று அரசு கூறுகிறது. இந்த விதியை மீறுபவர்கள் மீது அதிகாரிகள் எல்பிஜி நிரப்புவதை நிறுத்தலாம், கூடுதல் இணைப்புகளை ரத்து செய்தல் மற்றும் அபராதம் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com