சொந்த வீட்டிலேயே வாடகை கணக்கு காட்டுவோருக்கு எச்சரிக்கை: 200% அபராதம் விதிக்க வாய்ப்பு!

2026-ல் உங்கள் ஹெச்.ஆர்.ஏ (HRA) கிளைம் தள்ளுபடி ஆகாமல் இருக்க, நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன? விரிவாகப் பார்ப்போம்.
rental income
Income tax
Published on

சொந்த வீட்டிலேயே இருந்து வாடகைக்கு இருப்பதாக கூறி, வரியை மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் யுக்திக்கு வருமான வரித்துறை இப்போது ஒரு பெரிய செக் வைத்து விட்டது. ஏனெனில் இதற்குமுன்பு வரை அப்பாவிடமோ அல்லது மனைவியிடமோ ஒரு வாடகை ஒப்பந்தம் போட்டு, ஹெச்.ஆர்.ஏ (HRA) கிளைம் செய்து வந்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

இனிமேல் வருமான வரி விலக்கு தொடர்பான ITR ஃபைல் செய்யும் போது முறையான rent விவரங்களை அளிக்க வேண்டும். பொய்யாக கணக்கு காட்டினால் அதை தீவிரமாக பரிசீலனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. கூடுதல் கணக்கு காட்டும் பட்சத்தில் உங்களின் வீட்டு ஓனரின் பான் கார்டை சோதனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. வீட்டு ஓனரின் பான் கார்டு பொய்யாக தரப்பட்டு இருந்தால் அதற்கும் ஆக்சன் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர். இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. போலியான ஆவணங்களை சமர்ப்பித்தால், வரித் தொகையில் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்:
#BUDGET 2026-27: தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை..!
rental income

அந்த வகையில் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள புதிய வரைவு விதிகள் படி, நீங்கள் வாடகைக்கு வருமான வரி விலக்கு பெறுவதற்கு, யாருக்கு வாடகை கொடுக்கிறீர்கள் என்பதை மட்டும் சொன்னால் போதாது. அந்த வீட்டு உரிமையாளருக்கும், உங்களுக்கும் என்ன உறவுமுறை என்பதையும் இனிமேல் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியது கட்டாயம். அதற்காக படிவம் 124 (Form 124) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வரை வாடகை தொகைக்கு வரிவிலக்கு பெற, வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை மட்டும் கொடுத்தால் போதுமானதாக இருந்தது. ஆண்டு வாடகை ரூ.1,00,000-க்கு மேல் இருந்தால், வீட்டு உரிமையாளரின் பான் (PAN) எண் கட்டாயம். ஆனால் தற்போது நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரைவு விதிகளின்படி, இனி வாடகை தொகையானது ஒரு குறிப்பிட்ட வரம்பை தாண்டும் பட்சத்தில், வீட்டு உரிமையாளருக்கும் உங்களுக்கு என்ன உறவுமுறை என்பதை, படிவம் 12BA மூலம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.

போலி வாடகை ரசீதுகளை ஒழித்து கட்டவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் வரித்துறை கையில் எடுத்துள்ள இந்த ஆயுதம், பெற்றோருக்கோ, துணைவருக்கோ அல்லது உறவினர்களுக்கோ வாடகை கொடுப்பதை தடை செய்யவில்லை. அதாவது உங்கள் பெற்றோருக்குச் சொந்தமான வீட்டில் நீங்கள் வசித்தால், அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வாடகை செலுத்தி, உரிய ஆவணங்களுடன் வரி விலக்கு பெற முடியும்.

உதாரணமாக வேலை பார்க்கும் ஒரு பெண் தனது தாய்க்கு சொந்தமான வீட்டில் வசிப்பதற்கு முறையாக வாடகை ஒப்பந்தம் செய்துள்ளார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த பெண் மாதந்தோறும் ரூ.25,000 வாடகையை வங்கி கணக்கு மூலம் செலுத்தும் நிலையில், அந்த தாய் தனது மகளிடம் இருந்து வரும் வாடகையைத் தனது வருமான வரித்தாக்கலில் வருமானம் என காட்டுகிறார். அந்த பெண் தனது தாயுடனான உறவை வெளிப்படுத்தினாலும், அனைத்து ஆவணங்களும் உண்மையாக இருப்பதால், அந்த பெண்ணின் HRA கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படாது.

புதிய வரைவு விதிகளின் படி, அந்த பெண் 12BA படிவத்தில்- தான் வாடகை இருக்கும் வீட்டின் உரிமையாளர் தனது தாய் என்ற விவரத்தை குறிப்பிட வேண்டும். யாராக இருந்தாலும் நீங்கள் உங்கள் உறவினர் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வாடகை கொடுக்க திட்டமிட்டால், கட்டாயம் வாடகை ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

வாடகையை வங்கி பரிமாற்றம் மூலம் செய்தல், வீட்டு உரிமையாளரின் வருமான வரி தாக்கல் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. புதிய விதிமுறைகள் உறவினர்களுக்கிடையிலான பணப்பரிமாற்றத்தை முடக்கவில்லை, மாறாக அதைத் தெளிவுபடுத்துகின்றன. ஆக வரவுள்ள புதிய வரைவு விதிகளின் படி, உண்மையான வாடகை பரிமாற்றங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.

நீங்கள் முறையாக வாடகை செலுத்தினால் உங்களுக்கு பயமில்லை. ஆனால், அதேசமயம் தவறான தகவல்களை அளித்து வரியை சேமிக்க திட்டமிட்டால் கடும் அபராதம் நிச்சயம் காத்திருக்கிறது.

அதாவது, உண்மையில் வசிக்காத ஒரு வீட்டிற்கு வாடகை ரசீது காட்டுவது, முறையான வாடகை ஒப்பந்தம் அல்லது வங்கிப் பரிமாற்றம் இல்லாமல் இருப்பது, நீங்கள் கொடுக்கும் வாடகையை, வாங்கும் உரிமையாளர் (பெற்றோர்/உறவினர்) தனது வரித் தாக்கலில் காட்டாமல் இருப்பது போன்றவை ஆபத்தான செயல்களாகும்.

இதையும் படியுங்கள்:
இனி இதற்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்.! வெளியானது வருமான வரி புது விதிகள்.!
rental income

வருமான வரிச் சட்டம் 270A-ன் படி, தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பு செய்யும் பட்சத்தில், அதாவது குறைவான வருமானம் காட்டினால் செலுத்த வேண்டிய வரி தொகையில் 50% அபராதம் விதிக்கப்படும். அதுவே போலி ரசீதுகள், பணப்பரிமாற்றம் இல்லாத வாடகை ஒப்பந்தங்கள் போன்ற போலியான ஆவணங்களை சமர்ப்பித்தால், வரித்தொகையில் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com