சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சி நடனம்!

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சி நடனம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராக பதவியேற்றதை அடுத்து கோவாவில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சி நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

மகாராஷ்ட்ராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் நிலவிய அரசியல் குழப்பங்களுக்குப் பின், முதல்வர் உத்தவ் தாக்கரே தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே நேற்றிரவு அம்மாநிலத்தின் புதிய முதல்வராக ஆளுநர் கோஷ்யாரி முன்னிலையில் பதவியேற்றார். 

அதையடுத்து துணை முதல்வராக பிஜேபி-யின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். இதையடுத்து கோவாவில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள், மகிழ்ச்சியுடன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com