மனு அளித்த பெண்ணை அடித்த அமைச்சர்!

மனு அளித்த பெண்ணை அடித்த அமைச்சர்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்றபோது, தன்னிடம் மனு கொடுத்த ஒரு பெண்ணை அமைச்சர் பேப்பரால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த விடியோவை ''மக்கள் என்ன உங்கள் அடிமையா?'' என்ற தலைப்பில் பாஜக மாநிலைத் தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது:

விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைப் பெண்ணை அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!.

இவ்வாறு அண்ணாமலை தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்போது இந்த விடியோ வைராலாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com