விமானத்தில் பயணியை சரமாரி குத்து; மைக் டைசன் அதிரடி!

விமானத்தில் பயணியை சரமாரி குத்து; மைக் டைசன் அதிரடி!
Updated on

அமெரிக்க சான்பிரான்ஸ்கோ விமான நிலையத்திலிருந்த விமானம் ஒன்றில் பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன் பயணம் செய்வதற்காக வந்து அமர்ந்தார். அப்போது பின் இருக்கை ஆசாமி சளசளவென்று சத்தமாய் பேசிக் கொண்டு வந்தார். இதையடுத்து மைக் டைசன் கோபத்துடன் தன் சீட்டிலிருந்து எழுந்து, அந்த ஆசாமியின் முகத்தில் சராமாரியாக தாக்கும் காட்சி வைராலாகியுள்ளது.

முகத்தில் ரத்த காயத்துடன் அந்த பயணி அந்த வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அந்த விமானத்தில் பயனித்த சக பயணிகள் தெரிவித்ததாவது:

விமானத்தில் அந்த பயணி அனைவருக்கும் தொந்தரவு ஏற்படும் வகையில் சத்தமிட்டு கொண்டே வந்தார். அவரை அமைதியாக இருக்கும்படி மைக் டைசன் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை.

அதன்பிறகுதான் மைக் டைசன் கோபமுற்று அவரை தாக்கிவிட்டு, விமானம் கிளம்புவதற்கு முன் இறங்கி வெளியேறி விட்டார்.

– இவ்வாறு அந்த விமானத்திலிருந்த பயணிகள்  கூறியுள்ளனர்.
மைக் டைசன் ஏற்கனவே 1997-ம் ஆண்டு ஒருவரது காதை கடித்து துப்பியது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com