100 நாட்களில் 1,00,000 கோடி முதலீடு : சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தொடக்கம்; 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்த்து சாதனை!
வெற்றி தமிழ்நாடு 2026 முதலீட்டாளர்கள் மாநாடு
வெற்றி தமிழ்நாடு 2026 முதலீட்டாளர்கள் மாநாடுsource:vikatan
Updated on

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இதனை முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தொடக்கி வைத்தார். தவெக அரசு அமைந்த 100 நாட்களில் ரூபாய் 1 லட்சம் கோடி முதலீடு என்ற தகவல் வெளியானது. புதிய அரசு அமைந்த பிறகு மாநில அரசு சார்பில் நடைபெறும் முதல் முதலீட்டாளர் மாநாடு என்பதால் மிகப் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு ஆகும். இதில் ரூபாய் 67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பதவியேற்ற 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த தொழில்துறை வளர்ச்சியின் வழியாக தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை சுட்டிக் காட்டுகிறது. மாநிலத்தில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருவதால், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது.

ஜெர்மனி, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இன்று நடைபெறும் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளனர்.

ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இந்த மாநாடு அமையும் என்று பதிவிட்டிருந்தார். உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் பயணத்தில் 'வெற்றி தமிழ்நாடு 2026' ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இதுவரை ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 35,062 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் 14,790 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026 - 2027ஆம் ஆண்டுக்கான தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்று 67,452 கோடி மதிப்பிலான 97 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் 20 மாவட்டங்களில் 1.06 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, தவெக அரசின் தொழில்துறை வளர்ச்சி திட்டங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக பொறுப்பேற்ற நாள் முதலே தலைமை செயலகத்தில் பல்வேறு நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பை நிகழ்த்தினார். தொழில் தொடங்க உரிய வசதிகள் செய்து தருவதுடன் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

தமிழ்நாட்டை தொழில்துறையில் முன்னணியில் கொண்டு செல்லும் நோக்கத்தில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும், சிறப்பான கொள்கைகளும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றன. இப்படி குறுகிய காலத்தில் எட்டியுள்ள இந்த சாதனை, மாநிலம் முழுவதும் பொருளாதாரப் பாதையில் வளர்ச்சியையும், புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026ல், தூத்துக்குடியில் இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் தயாரிப்பு ஆலையை அமைக்க ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஏவுகலன்களின் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளைக் கொண்ட இந்த திட்டத்திற்காக ரூ.250 கோடி முதலீடு செய்யப்படுவதோடு, இப்பகுதி இளைஞர்களுக்கு 500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

வெற்றி தமிழ்நாடு 2026 முதலீட்டாளர்கள் மாநாடு
வெற்றி தமிழ்நாடு 2026 முதலீட்டாளர்கள் மாநாடுsource:twitter
  • ரூ.67,452 கோடி ரூபாய் முதலீடு- 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு

  • 'லைட் ஹவுஸ் கிரின்' நிறுவனம் திருச்செந்தூர், தூத்துக்குடியில் ரூ.10,000 கோடி முதலீடு. இதன் மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு.

  • ஜென் ரோபாடிக் நிறுவனம் ரூ.150 கோடி முதலீடு - 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு.

  • விக்ரம் சோலார் - ரூ.1,300 கோடி முதலீடு - 800 பேருக்கு வேலைவாய்ப்பு. திருவண்ணாமலையில் ராக்வுல் - ரூ.510 கோடி முதலீடு - 200 பேருக்கு வேலைவாய்ப்பு.

  • திண்டிவனத்தில் 'சென்னை SSSS எக்யூப்மென்ட்ஸ்' - ரூ.130 கோடி முதலீடு - 150 பேருக்கு வேலைவாய்ப்பு.

  • தஞ்சையில் 'வேல்முருகன் ஹெவி இன்ஜினியரிங்' ரூ.50 கோடி முதலீடு - 200 பேருக்கு வேலைவாய்ப்பு.

  • தமிழ்நாட்டில் ரூ.2500 கோடி முதலீடு செய்கிறது ஹிந்துஜா குழுமம்

  • ஹிந்துஜா குழும முதலீட்டால் 500 பேருக்கு வேலை வாய்ப்பு

  • தமிழ்நாடு - ஹிந்துஜா குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • EV வாகனம் - தமிழ்நாட்டுடன் அலட்ராவயோலெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • அல்ட்ராவயோலெட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.779 கோடி முதலீடு

  • கிருஷ்ணகிரியில் அமைகிறது அல்ட்ராவயோலெட் EV ஆலை - 4000 பேருக்கு வேலை

  • முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

  • டெய்ம்லர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.4000 கோடி முதலீடு

  • காஞ்சிபுரத்தில் அமைகிறது டெய்ம்லர் நிறுவனத்தின் ஆலை

  • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது

  • லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2500 கோடி முதலீடு செய்கிறது

  • தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி முதலீடு செய்கிறது டைட்டன்

  • செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்கிறது

  • ரூ.5000 கோடி முதலீடு செய்கிறது ஜே.கே. டயர்ஸ் நிறுவனம்

  • பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு

இதையும் படியுங்கள்:
நெட்பிளிக்ஸின் லேட்டஸ்ட் ஃபீல் குட் வெப் சீரிஸ் 'Musafir Cafe' விமர்சனம்!
வெற்றி தமிழ்நாடு 2026 முதலீட்டாளர்கள் மாநாடு
logo
Kalki Online
kalkionline.com