சிறுகதை: காணாமல் போன சங்கிலி...!

காணாமல் போன தங்கச் சங்கிலி பின்னணியில் நடந்த சுவாரஸ்யமானத் திடுக்கிடும் சிறுகதை.
சிறுகதை | A man with chain and woman with shock
சிறுகதை | A man with chain and woman with shockImage credit: Gemini AI
நாமக்கல் எம்.வேலு

கார்ப்பொரேஷன் வங்கியில் எழுத்தராக சேர்ந்து உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றேன். 1988ல் நாமக்கல் கிளையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்து இதுவரை 200 கதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளேன். தினமலர்-வாரமலர், கதைமலர், தீபாவளிமலர், குமுதம், விகடன், குங்குமம், சாவி, மற்றும் கல்கி, மங்கையர்மலர், கோகுலம், சஹானா இணைய இதழ்களிலும் எழுதி உள்ளேன். தினமலர்-வாரமலரிலும் மங்கையர்மலர் - ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியிலும், சஹானா இணைய இதழிலும், அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளேன்.

Updated on: 
MM strip
MM strip

வீட்டுக்குள் நுழைந்த செல்வி திடுக்கிட்டுப்போனாள்.

‘‘ஐயோ... தம்பி கழுத்துல கிடந்த சங்கிலியைக் காணோம்ங்க...’‘ என்று கத்தினாள்.

மொபெட்டை நிறுத்திவிட்டு, வீட்டுப்படியில் கால்வைத்த முரளியும் திடுக்கிட்டுப்போய், ‘‘என்னடி சொல்றே...? சங்கிலியைக் காணோமா...?’‘ என்று அலறியபடி உள்ளே ஓடினான்.

மொபெட்டில் கோயிலுக்குப் போயிருந்தார்கள். பையனுக்கு வயது ஒன்று. அவனை சீவி சிங்காரித்து, இரட்டை ஜடை போட்டு, திருஷ்டிப் பொட்டு வைத்து, கையில் வளையல், காலில் கொலுசு, கழுத்தில் சங்கிலி எல்லாம் போட்டு தூக்கிச்சென்றிருந்தார்கள்.

‘‘ஏங்க... தம்பிக்கு சங்கிலி போட்டுத்தாங்க தூக்கிட்டுப் போனோம்... கோயில்ல பிரகாரத்தைச் சுத்திட்டு வந்து வரிசையில நின்னு பொங்கல் வாங்கிட்டு சிமெண்ட் சிலாபுல உட்காரும்போதுகூட நான் எதேச்சையா தம்பியோட கழுத்துல சங்கிலியப் பார்த்தேனே...’‘

‘‘ஆமா... சாப்பிட்டுட்டு கைகழுவிட்டு, வெளியேவந்து மொபெட்டை எடுத்துக்கிட்டு கிளம்புனோம்... வழில நீதான் காபி குடிக்கணும்னு சொன்னே. ஒரு பேக்கரில நிறுத்தினோம். நீ உள்ளே வந்தா சிகரெட் நாத்தம் வரும்னுட்டு மொபெட்டுக்கிட்டயே நின்னுக்கிட்டே... நான் காபி வாங்கிட்டு வந்து கொடுத்தேன். நீ குடிச்சே. நீ காபி குடிக்கணுமேன்னு உன்கிட்டயிருந்து தம்பிய வாங்கிட்டு கொஞ்சிட்டிருந்தேன். அப்போ நானும் கவனிச்சேனே அவன் கழுத்துல சங்கிலி கிடந்ததை..''

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com