சீனாவில் நொடிக்கு 1.2 TB அதிவேக இன்டர்நெட் அறிமுகம்! எப்படி சாத்தியம்? 

1.2 TB per second high-speed Internet introduced in China
1.2 TB per second high-speed Internet introduced in China

இந்த உலகம் இன்டர்நெட் இன்றி இயங்காத நிலைக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இணையமானது அத்தியாவசமான ஒன்றாக மாறியிருக்கும் நிலையில், உலகிலேயே அதிவேக இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. இதன் வேகம் நிச்சயம் உங்களை அதிசயிக்க வைக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இன்டர்நெட் என்பது காஸ்ட்லியான ஒன்றாக இருந்தது. ஒரு ஜிபி 256 ரூபாய் என்ற விலையில் இருந்தது. யூடியூபில் ஏதாவது காணொளி பார்க்க வேண்டும் என்றாலே “ஐயோ நெட் காலி ஆகி விடுமே” என நினைத்து, உடனடியாக மூடிவிடும் சூழல் இருந்தது. ஆனால் இதன் நிலை தற்போது முற்றிலுமாக மாறிவிட்டது. உலகிலேயே இந்தியாவில் தான் இன்டர்நெட் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது எனலாம். அதே நேரம் இந்தியா முழுவதும் 4G சேவை கிடைத்துவரும் நிலையில், தற்போது அதை 5G சேவையாக மாற்றும் வேலைகள் நடந்து வருகிறது. 5G சேவையில் இணையவேகம் அதிகபட்சமாக 500 Mbps வரை கிடைக்கிறது.

அதிவேக இன்டர்நெட்டின் சிறப்புகள்:

சீனாவில் தற்போது நொடிக்கு 1.2 Terabyte வேகத்தில் செயல்படும் இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகில் இயங்கிவரும் பெரும்பாலான இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், நொடிக்கு 100 ஜிபி வேகத்தில் மட்டுமே இயங்குகிறது. அதிலும் அதிகபட்சமாக அமெரிக்காவில் நொடிக்கு 400 ஜிபி என்ற வேகத்தில் இணையம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதைவிட பல மடங்கு அதிகமாக 1.2TB இணையவேகம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முதலில் 3 ஆயிரம் கிலோமீட்டருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆப்டிகல் பைபர் கேபிளிங் முறையில் கொண்டுவரப்பட்டுள்ள அதிவேக இன்டர்நெட் சேவை, சீனாவின் ஊஹான், பெய்ஜின் மற்றும் குவாங்சோ ஆகிய மாகாணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Tsinghua University, Huawei Technologies, China mobiles, Cernet Corporation ஆகியவற்றின் உதவியுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஒரு நொடியிலேயே 150 HD திரைப்படங்களை நேரடியாகவோ அல்லது டவுன்லோட் செய்யக்கூடிய அளவில் இதன் இணையவேகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விலங்குகளுக்கான செயற்கை இறைச்சி பற்றி தெரியுமா?
1.2 TB per second high-speed Internet introduced in China

1.2 TB இணைய வேகம் சாத்தியமா? 

இந்த இணையவேகத்தை அடைவதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களும், உட்கட்டமைப்புகளும் தேவைப்படும். மேலும் இதற்காக பெரிய தரவு மையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சில அதிவேக நெட்வொர்க் அணுகல்கள் அவசியம். சீனாவில் இவை அனைத்தும் சாத்தியம் என்பதால், இந்த இணைய வேகம் உண்மையில் சாத்தியம்தான். இத்தகைய இணைய வேகத்தை அடைவதற்கு ஆப்டிகல் பைபர் கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மேம்படுத்தப்பட்ட தரவு மையங்கள் மூலமாக இதைவிட அதிகமான இணைய வேகத்தை கூட நாம் அடைய முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com