1.66 லட்சம் சிம்கார்டுகள் முடக்கம்... தலைவிரித்தாடும் சைபர் குற்றங்கள்!

SIM card.
SIM card
Published on

எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறதோ, அதே அளவுக்கு சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன. இவற்றைத் தடுக்கும் விதமாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட சுமார் 1.66 லட்சம் சிம்கார்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக டெலிகாம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் கனெக்சன்களை துடிக்கப் போவதாகவும் அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

DoT எனப்படும் டெலிகம்யூனிகேஷன் சட்ட அமலாக்க முகவர்களால் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இணையம் வழியாக நடத்தப்படும் நிதி மோசடிகள் அதிகரித்துவிட்டதால், அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால், whatsapp அல்லது மெசேஜ்கள் மூலமாக, ஒருவரை ஏமாற்றி பணம் பறிக்க நினைக்கும் மோசடிக்காரர்கள் இனி இயங்குவது கடினம். 

கடந்த மே மாதம் 2023ல் ஸ்மார்ட்போன் பயனர்களை பாதுகாப்பதற்காக Sanchar Saathi என்ற இணையதளத்தை DoT அறிமுகப்படுத்தியது. அந்த இணையதளம் வழியாக குடிமக்கள் தங்களது பெயரில் எத்தனை சிம்கார்டுகள் இயங்குகிறது என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அங்கே அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நம்பரை உள்ளீடு செய்தால், அது தொடர்புடைய எல்லா விவரங்களும் காட்டப்படும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாத எண்ணில் உங்களது பெயர் இணைக்கப்பட்டிருந்தால், அதை நீங்களே பிளாக் செய்யலாம். 

இந்த அம்சம் வாயிலாக மே 2024 வரை சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் எண்கள் பிளாக் செய்யப்பட்டிருப்பதாகவும், 8 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களை கண்டுபிடித்துள்ளதாகவும் சஞ்சார் சாத்தி டேட்டாவில் காட்டப்படுகிறது. இந்த முயற்சியால் மொபைல் போன்கள் மோசடி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படாமல் இருப்பது தடுக்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
உடலில் Testosterone குறைவாக இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?
SIM card.

சஞ்சார் சாத்தி இணையதளத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்தும் விதமாக மார்ச் 2024ல் Chaksu மற்றும் DIP போன்ற தளங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலமாக மொபைல் கனெக்சன் சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளை தடுப்பது மேலும் எளிதாகும். இந்த இணையதளங்கள் வாயிலாக கிடைத்த ரிப்போர்ட்டின் படி, கடந்த ஏப்ரல் மாதம் வரை சைபர் குற்றத்துடன் தொடர்புடைய 1.5 லட்சத்திற்கும் அதிகமான IMEI எங்கள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. 

மேலும் அந்த IMEI கொண்ட போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளும் முடக்கப்பட்டுள்ளதாக DoT அதிகாரிகள் கூறியுள்ளனர். இது எதிர்காலத்தில் சைபர் குற்றங்களை பெரிதளவில் தடுக்கும் என நம்பப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com