

புதிய தலைமுறைக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் கொண்ட டஸ்டர் மாடலை (Renault Duster)ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தினத்தில் (டிசம்பர் 26-ம்தேதி) அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் பிற நாடுகளில் வலம் வரும் அதி சொகுசு வாகனமான டஸ்டரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
2012-ம் ஆண்டு தொடங்கி 2022-ம் ஆண்டு வரைக்கும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்த கார் ஒரு ஐகானிக் SCV காராக இருந்து வந்தது. பலரும் இந்த கார் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தக் காரின் சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதன்படி இந்தக் காரில் ஒய் வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாலிகோனல் ஹெட்லாம்ப் உள்ளன.
இந்த காரின் உள் வடிவமைப்பை பொருத்தவரை 10.1 இன்ச் ஓப்பன் ஆர் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற வசதியுடன் வருகிறது.
மேலும் இந்த காரில் வயர்லெஸ் சார்ஜிங், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், டைப் சி சார்ஜிங் போர்ட்கள், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், லெவல்2 அடாஸ், லேன் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஆகிய அம்சங்கள் உள்ளது.
பம்பர், முன்புற கிரில்கள் புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சி பில்லரில் பின்புற கதவு பிடி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கார் 48 வோல்ட் மைல்டு ஹைபிரீட்டுடன் கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.6 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக், 1.0 லிட்டர் பெட்ரோல்-எல்.பி.ஜி. வேரியண்ட்களில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டஸ்டருக்கு இந்தளவுக்கு ரசிகர்கள் இருப்பதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் conpact scvஐ கொண்டு வந்தது டஸ்டர் தான் என்றே சொல்லலாம். 2022-ம் ஆண்டு டஸ்டர் விற்பனையை நிறுத்தும் போது கிட்டத்தட்ட 2 லட்சம் டஸ்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டஸ்டர் கார் விற்பனையில் தொடர்ந்து இருந்திருந்தால் மற்ற நிறுவன கார்களை விட அதிக விற்பனையை பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இதன் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்ஷவன் சென்னை ஒரகடத்தில் உள்ள Renault Nissan ஆலையில் தான் தற்போது தயாராகி கொண்டிருக்கிறது. இ்நத கார் சிஎம்எஃப்-பி பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த காருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் புதிய மாடல் ரெனால்ட் டஸ்டர் காரின் வருகைக்காக பலரும் காத்திருக்கிறார்கள்.
இந்த கார் நிச்சயம் விற்பனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதுடன் இதன் வருகை அதன் போட்டியாளர்களின்(மற்ற நிறுவன கார்கள்) விற்பனையை நிச்சயம் பாதிக்கும் என்றே சொல்லலாம்.