இன்றைய சூழ்நிலையில் மொபைல் போன் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது. அதேபோல் மொபைல் போனும் இன்டர்நெட்டும் பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. சில பிரௌசர் டேட்டாக்கள் மற்றும் இன்டர்நெட் தகவல்களால் இணைய வேகம் மெதுவாகிறது. நீங்கள் என்னதான் ஹை ஸ்பீட் டேட்டா ரீசார்ஜ் செய்து இருந்தாலும் இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. அந்த வகையில் மந்தமாக செயல்படும் உங்கள் போனில் இன்டர்நெட் வேகத்தை (how to increase data speed in your mobile) அதிகரிக்கும் மூன்று முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. முதலில் உங்கள் போனில் உள்ள நார்மல் செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்ல வேண்டும். பின்பு மொபைல் நெட்வொர்க் (Mobile Network) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக டேட்டா சேவர் (Data saver) விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். டேட்டா சேவர் ON நிலையில் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ON-ல் இருந்தால், அதை OFF நிலைக்கு மாற்ற வேண்டும் அவ்வாறு செய்தால் மொபைல் போனில் இன்டர்நெட் வேகம் சற்று அதிகரிக்கும்.
2. இரண்டாவதாக உங்கள் போனில் இருக்கும் கூகுள் குரோம் (Google chrome browser) செல்ல வேண்டும். அல்லது நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் வெப் பிரவுசரை (web browser) திறந்துக்கொள்ளுங்கள். பிறகு, அதன் மேல் வலது மூலையில் உள்ள 3 புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்யவும். பிறகு செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் உள்ளிருக்கும் சைட் செட்டிங் (Site Settings) என்ற விருப்பத்தில் கிளிக் செய்யவும். கீழே ஸ்க்ரோல் செய்து ஸ்டோரேஜ் (Storage) அல்லது டேட்டா ஸ்டோர்டு (Data stored) கிளிக் செய்யவும். இப்போது கிளியர் ஆல் டேட்டா (Clear all data) என்பதை கிளிக் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் மொபைல் போனின் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும்
3. மீண்டும் கூகுள் குரோம் பிரவுசரை திறக்கவும். மறுபடியும் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யவும். செட்டிங்ஸ் சென்று சிங்க் ஆன் (Sync On) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது இந்த ஆப்ஷன் ஆஃப் (OFF) நிலைக்கு மாறிவிடும். இப்படி செய்வதன் மூலமாகவும் உங்கள் போனின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க முடியும்.
மேற்கூறிய மூன்று முறைகள் தவிர பேக்ரவுண்டில் இயக்கப்படும் தேவையில்லாத சில ஆப்ஸ் டேட்டாவை தடுப்பதும், இன்டர்நெட் வேகத்தை கட்டாயம் சிறிதளவாவது அதிகரித்திருக்கும்.