3D ஒலி அனுபவம்: நவீன தமிழ் சினிமாவில் டால்பி அட்மாஸின் அதிரடி ஆதிக்கம்!

3D sound experience
3D sound experience
Published on

திரைப்படம் என்பது காட்சி மற்றும் ஒலி ஆகிய இரண்டின் இணைப்பாக உருவாகும் ஒரு கலை வடிவமாகும். காட்சிகள் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒலி தெளிவாக இல்லையெனில் திரைப்பட அனுபவம் முழுமையடையாது. தமிழ் சினிமா 1918ஆம் ஆண்டு மௌனப்படங்களால் தொடங்கி, பின்னர் ஒலி திரைப்படங்களாக வளர்ச்சி பெற்றது. காலப்போக்கில் ஒலி தொழில்நுட்பமும் முன்னேறி, இன்று உலகத்தரத்தில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளது. இந்த முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது அமெரிக்க நிறுவனமான Dolby Laboratories உருவாக்கிய டால்பி (Dolby) ஒலி தொழில்நுட்பம் ஆகும். இங்கு தமிழ் சினிமாவில் டால்பி ஒலி எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆரம்பகால தமிழ் சினிமா மற்றும் ஒலி: தமிழில் முதல் பேசும் திரைப்படம் Kalidas (1931) ஆகும். அந்த காலத்தில் ஒலி பதிவு வசதிகள் மிகவும் எளிமையானவை. ஒரே மைக்கில் பதிவு, பின்னணி சத்தம் அதிகம், இசை மற்றும் உரையாடல் தெளிவு குறைவு, இவ்வாறான சவால்கள் இருந்தபோதிலும், தமிழ் சினிமா தொடர்ந்து வளர்ச்சி பெற்றது. 1950–80களில் ஒலி பதிவு கருவிகள் மேம்பட்டாலும், உலகத் தரத்தில் ஒலி அனுபவம் கிடைக்கவில்லை.

1990கள் – டால்பி ஒலியின் அறிமுகம்: 1990களில் உலகம் முழுவதும் டால்பி தொழில்நுட்பம் பரவத் தொடங்கியது. தமிழ் சினிமாவும் அதனை ஏற்றுக்கொண்டது. Dolby Stereo முறையை பயன்படுத்திய முதல் முக்கிய தமிழ் திரைப்படங்களில் ஒன்று குருதிப்புனல்(1995). நடித்தவர் கமல்ஹாசன். இந்தப் படத்தில் துப்பாக்கிச் சத்தம், வெடிப்பு போன்றவை மிகவும் இயல்பாக ஒலித்தன. திரையரங்குகளில் சுற்றி ஒலி அனுபவம் கிடைத்தது. இதன் மூலம் தமிழ் சினிமா ஒலி தரத்தில் புதிய நிலையை அடைந்தது.

இதையும் படியுங்கள்:
வைரஸ் பாதிப்பா? ஹேக்கர்கள் கைவரிசையா? நீங்களே செக் செய்வது எப்படி?
3D sound experience

இசைத் துறையில் ஏற்பட்ட புரட்சி: டால்பி ஒலி தொழில்நுட்பம் தமிழ் திரைப்பட இசையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. A.R. Rahman போன்ற இசையமைப்பாளர்கள், ஒவ்வொரு இசைக் கருவியும் தனித்தனி சேனல்களில் தெளிவாக கேட்கும் வகையில் பதிவு செய்தனர். பின்னணி இசை (Background Score) உணர்ச்சியை அதிகரித்தது. பாடல்கள் உலகத் தரத்தில் தயாரிக்கப்பட்டன. வெளிநாடுகளிலும் தமிழ் இசை பிரபலமானது.

Dolby Digital மற்றும் 5.1 Surround Sound: 1990களின் இறுதியில் மற்றும் 2000களில் Dolby Digital அறிமுகமானது. இதன் சிறப்புகள் என்னவென்றால் 5.1 சேனல் ஒலி (முன், பின், பக்கங்கள் + Subwoofer). ஆக்ஷன் காட்சிகள் அதிக தாக்கத்துடன் ஒலித்தது. பார்வையாளர்களுக்கு திரையரங்கு அனுபவம் அதிகரித்தது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் Dolby Digital அவசியமாக மாறியது.

Dolby Atmos – நவீன யுகம்: இன்றைய காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் முறையாக Dolby Atmos உள்ளது. Dolby Atmos மூலம் மேலிருந்து வரும் ஒலி உணர்வு, மழை பெய்தல், விமானம் பறத்தல் போன்ற காட்சிகள் இயல்பாக அனுபவிக்க முடியும். ஒலி மூன்று பரிமாணங்களில் (3D) கேட்கும் அனுபவம். இன்றைய பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் Atmos முறையில் வெளியிடப்படுகின்றன.

OTT மற்றும் வீட்டு தியேட்டர் வளர்ச்சி: டால்பி தொழில்நுட்பம் இப்போது ஸ்மார்ட் டிவி, ஹோம் தியேட்டர், OTT தளங்கள், இவற்றிலும் பரவலாக பயன் படுத்தப்படுகிறது.

தமிழ் சினிமாவின் ஒலி வளர்ச்சி மௌனப் படங்களிலிருந்து Dolby Atmos வரை நீண்ட பயணமாகும். இந்த வளர்ச்சியில் டால்பி தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. டால்பி ஒலி அறிமுகமானதன் மூலம் திரைப் படங்களின் தரம் உயர்ந்தது. இசை மற்றும் பின்னணி ஒலி உலகத்தரத்தை அடைந்தது. பார்வையாளர்களுக்கு முழுமையான அனுபவம் கிடைத்தது.

இதையும் படியுங்கள்:
200 மில்லியன் டாலர் வேண்டாம் என உதறிய கிளாட் ஏ ஐ... அமெரிக்க அரசாங்கத்தோடு நடக்கும் மாபெரும் மோதல்!
3D sound experience

இன்று தமிழ் சினிமா காட்சியிலும் ஒலியிலும் உலகளவில் போட்டியிடும் நிலையில் உள்ளது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று டால்பி ஒலி தொழில்நுட்பம் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com