200 மில்லியன் டாலர் வேண்டாம் என உதறிய கிளாட் ஏ ஐ... அமெரிக்க அரசாங்கத்தோடு நடக்கும் மாபெரும் மோதல்!

Claude AI Vs America Military
Claude AI Vs America Military
Published on

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை நன்மைகளுக்காகப் பயன்படுத்தும் அதே வேளையில், அழிவிற்கும் பயன்படுத்த பல நாடுகள் துடித்துக் கொண்டு இருக்கின்றன. தற்போது உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ராணுவத் துறைக்கும், முன்னணி ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்திற்கும் இடையே ஒரு மிகப்பெரிய பனிப்போர் நடந்து வருகிறது. 

இது வெறும் ஒரு நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான சாதாரண பிரச்சனை கிடையாது, ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகும் ஒரு மிக முக்கியத் தருணம் எனலாம். அப்படி அங்கு என்னதான் நடக்கிறது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பாதுகாப்பு வளையத்தை உடைக்கச் சொல்லும் ராணுவம்!

ஆந்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கிய கிளாட் (Claude) என்ற அதிநவீன ஏஐ மாடலை அமெரிக்காவின் ராணுவத் துறையான பென்டகன் தனது சில ரகசியப் பணி களுக்காகப் பயன்படுத்தி வருகிறது. பொதுவாகவே எந்த ஒரு ஏஐ மாடலாக இருந்தாலும், அது மனிதர்களுக்கு எதிராக எந்த ஒரு மோசமான, ஆபத்தான வேலையையும் செய்யாமல் இருக்க சில கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த நிறுவனங்கள் சாப்ட்வேரில் அமைத்திருக்கும்.

இப்போது பென்டகன் என்ன சொல்கிறது என்றால், அந்தப் பாதுகாப்பு வளையங்கள் அனைத்தையும் முற்றிலுமாகக் கழற்றிவிட்டு, கிளாட் ஏஐயை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குப் பெரிய அளவில் நெருக்கடி கொடுத்து வருகிறது.

பணிய மறுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனம்!

ராணுவத்தின் இந்த அதிரடியான கோரிக்கையை ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ ஆன டாரியோ அமோடி மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளை மட்டும் நீக்கிவிட்டால், ராணுவம் தங்களது தானியங்கி ஆயுதங்களை மனிதர்களின் துணையின்றி இயக்குவதற்கும், பொதுமக்களை மிக உன்னிப்பாகக் கண்காணிக்கவும் இந்த ஏஐயைப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். 

ஆனால், தொழில்நுட்பம் ராணுவப் பயன்பாட்டிற்கு என்று வந்துவிட்டால், அதில் எந்தவிதமான முட்டுக்கட்டைகளோ அல்லது கட்டுப்பாடுகளோ இருக்கக்கூடாது என்று பென்டகன் தரப்பில் மிகத் தீவிரமாக வாதிடுகிறார்கள். தங்களது பேச்சைக் கேட்காவிட்டால், அமெரிக்க அரசாங்கம் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குத் தரவிருந்த சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான மிகப்பெரிய கான்ட்ராக்ட் கூட ரத்து செய்யப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
இரவில் மட்டுமே வெளியே வரும் இந்த மர்ம விலங்கைப் பற்றித் தெரிந்தால் நிச்சயம் மிரண்டு போவீர்கள்!
Claude AI Vs America Military

இது வெறுமனே அமெரிக்கா மற்றும் ஒரு தனிப்பட்ட நிறுவனம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே கிடையாது. ஒருவேளை பணத்திற்காகவோ, மிரட்டலுக்குப் பயந்தோ ஆந்த்ரோபிக் நிறுவனம் அமெரிக்க ராணுவத்தின் இந்த நிபந்தனைக்குத் தலைசாய்த்துவிட்டால், அது எதிர்காலத்தில் ஒரு மிக மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும். இதனைப் பின்பற்றி உலகின் மற்ற அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு ஏஐ நிறுவனங்களை இதேபோல மிரட்டி ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைப்பார்கள். 

எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அரசாங்கத்தின் இந்த மாதிரியான அதிகாரப் போட்டிகளை எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் என்பதற்கு இந்த மோதல் ஒரு மிகப்பெரிய உதாரணமாக அமையும்.

இதையும் படியுங்கள்:
நிஜ யானையா? இயந்திரமா? கேரளக் கோவில்களில் வலம் வரும் 'ரோபோ' யானை!
Claude AI Vs America Military

வரும் நாட்களில் இந்த மோதல் எந்த மாதிரியான புதிய திருப்பங்களைச் சந்திக்கப்போகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் மிக ஆவலோடு கவனித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு மனிதனைக் காக்கப் போகிறதா அல்லது ஆயுதமாக மாறி அழிக்கப் போகிறதா என்பதற்கான விடை இந்த மோதலின் முடிவில்தான் முழுமையாக அடங்கியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com