3D Printing ராக்கெட் எப்படி சாத்தியம்? சாதித்து காட்டிய சென்னை இளைஞர்கள்!

 3D Printing Rocket.
3D Printing Rocket.

3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் ராக்கெட்டை தயாரிக்க முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் சென்னை இளைஞர்கள். இவர்கள் உருவாக்கிய 3டி பிரிண்டிங் ராக்கெட் அடுத்த மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பறக்கத் தயாராக உள்ளது. 

3 நாட்களில் ஒரு ராக்கெட்டை வடிவமைக்க முடியுமா? இதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் சென்னை இளைஞர்கள். இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் ராக்கெட் வடிவமைப்பில் சென்னை ஐஐடி ரிசர்ச் பார்கை சேர்ந்த Agnikul நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அவர்கள் தயாரித்த 3டி பிரிண்டிங் ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கு தயாராக இருக்கிறது. 

நவீன தொழில்நுட்ப யுகத்தில் செயற்கைக்கோள் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், ஒரு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆயுட்காலம் முடிந்த பின் செயலிழக்கும் செயற்கைக் கோள்களுக்கு மாற்றாக மீண்டும் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக தொடர்ந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது. அவ்வாறு வடிவமைக்கப்படும் ராக்கெட்களுக்கு என்ஜினை உருவாக்க மட்டும் 6 மாதங்கள் வரை ஆகிறது.

ஒட்டுமொத்த ராக்கெட்டையும் வடிவமைத்து அனைத்து விதமான தொழில்நுட்ப பாகங்களையும் இணைத்து முழுமையடையச் செய்ய ஒரு வருடம் வரை எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் ராக்கெட் இன்ஜின் தயாரிப்பதற்கு 3d பிரிண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த Aknikul நிறுவனத்தினர். 

இந்நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கிரையோஜனைக் என்ஜின் தயாரிப்பதற்கான 3d பிரிண்ட் இயந்திரத்தை வடிவமைத்து வரும் நிலையில், கடந்த வருடம் 3டி பிரிண்டிங் மூலம் முதல் கிரையோஜெனிக் என்ஜினை வடிவமைத்தார்கள். இந்த தொழில்நுட்பம் மூலமாக மூன்று நாட்களில் என்ஜின் தயாரிக்கப்பட்டு விடுவதால், 15 நாட்களுக்குள் மொத்த ராக்கெட்டையும் வடிவமைக்க முடியும் எனத் தெரிவிக்கின்றனர். 

இதையும் படியுங்கள்:
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மட்டும் ஏன் ராக்கெட் ஏவப்படுகிறது தெரியுமா?
 3D Printing Rocket.

இப்போது ஒரு அடுக்கு ராக்கெட் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இரண்டடுக்கு கிரையோஜெனிக் என்ஜின் சோதனைகளும் நடைபெற்று வருகிறது. வெவ்வேறு எடைகள் கொண்ட செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் அளவுக்கு 3டி பிரிண்டிங் எந்திரம் மூலம் ராக்கெட் வடிவமைப்பில் இந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இவை அனைத்தும் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் ராக்கெட் அடுத்த மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com