ChatGPT பயன்படுத்தி யுனிவர்சிட்டி தேர்வு எழுதிய 400 மாணவர்கள் சிக்கினார்.

ChatGPT பயன்படுத்தி யுனிவர்சிட்டி தேர்வு எழுதிய 400 மாணவர்கள் சிக்கினார்.

Published on

ண்டனில் ChatGPT பயன்படுத்தி தேர்வெழுதிய 400 மாணவர்கள் சிக்கிக் கொண்டதால், இனி விடைத்தாள்களைத் திருத்தும்போது Anti Plagiarism சாஃப்ட்வேர் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சமீப காலமாகவே ChatGPT பயன்படுத்தி பல அச்சுறுத்தல் தரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது காலப்போக்கில் மனித ஆற்றலையே முற்றிலுமாக மழுங்கச் செய்துவிடும் போலிருக்கிறது. ஏற்கனவே ஸ்மார்ட்போன் வந்த பிறகு, தன் பெற்றோருடைய மொபைல் எண்ணைக் கூட யாரும் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை. சிறிய கணக்கு போட வேண்டும் என்றாலும், உடனடியாக ஸ்மார்ட் போனை பலரும் கையில் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.  

மனிதர்களும் டெக்னாலஜியின் வளர்ச்சிக்கு ஏற்ப, தங்கள் வேலைகளைக் குறைத்துக் கொண்டு ஜாலியாக இருக்க நினைக்கின்றனர். தற்போது புதிதாக வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் அப்படித்தான் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். 

ChatGPT-யை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்தால், அதற்கென்று தனியான சட்டதிட்டங்கள் கொண்டுவர வேண்டும் போலிருக்கிறது. ஏனென்றால் அதைப் பயன்படுத்தி ஆக்கபூர்வ காரியங்கள் நடந்தாலும் அதைவிட அதிகமாக குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் தெலுங்கானாவில் கூட அரசு தேர்வுக்கு ChatGPT பயன்படுத்தி சிலர் தேர்வு எழுதினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆனால், தற்போது பல்கலைக்கழக மாணவர்களும் இதைப் பயன்படுத்தி தேர்வு எழுதிய செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 400 க்கும் அதிகமான மாணவர்கள் ChatGPT பயன்படுத்தி பதில் எழுதியதால், பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து மாணவர்கள் எழுதும் விடைத் தாள்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள சில பிரபலமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். 

ஆரம்பத்தில் ஒரு சில மாணவர்கள் மீது சந்தேகம் மட்டுமே எழுத நிலையில், மற்ற எல்லா மாணவர்களின் தாள்களையும் ஆய்வு செய்தபோது, பல பல்கலைக்கழக மாணவர்களும் இதில் சிக்கியுள்ளனர். எனவே மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழகங்கள், விசாரணைக் குழுவை அமைத்து, இங்கிலாந்தில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது. 

இந்த முறைகேட்டின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இனி எல்லா பல்கலைக்கழகங்களிலும் Anti Plagiarism சாப்ட்வேரைப் பயன்படுத்தி மாணவர்களின் விடைத்தாளை ஆய்வு செய்யும் நடைமுறை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், கடுமையான கட்டுப்பாடுகளை மாணவர்கள் இனிவரும் காலங்களில் சந்திக்க நேரிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com