42 செகண்டில் 95 மாடி! லிஃப்ட் கண்ணாடியில் ஒளிந்துள்ள மாபெரும் சைக்காலஜி ட்ரிக் தெரியுமா?

லிஃப்ட் மெதுவாகச் செல்வதுபோல் உணர்வதைத் தடுக்க இன்ஜினியர்கள் செய்த மாபெரும் தந்திரம் மற்றும் வேகமான லிஃப்ட் ரகசியம்.
லிஃப்ட் கண்ணாடி - World Fastest Elevator
லிஃப்ட் கண்ணாடி - World Fastest Elevator
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 

பெரிய அப்பார்ட்மெண்ட், மால்ஸ்ல லிஃப்ட்ல நுழைஞ்சதும் கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுப்போம்; ஆனா அது பியூர் டிசைன் இல்ல, சயின்ஸ் ட்ரிக். கண்ணாடி நம்ம கவனத்தை திசை திருப்பி, லிஃப்ட் வேகமா போகுற மாதிரி ஃபீல் கொடுக்குது, அடைச்ச இட பயம் குறைக்குது. வீல்சேரில் வர்றவங்க ரிவர்ஸ்ல சுலபமா வெளியேறவும், பாதுகாப்பா யூஸ் பண்ணவும் இது ரொம்ப உதவுது.

நானும் இதுவரைக்கும் லிஃப்ட்ல ஜாலியா ஏறி யூஸ் பன்னிருகேனே தவிர, அதுக்கு பின்னாடி இருக்குற மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பத்தி பெருசா யோசிச்சதே இல்லைங்க!

ஆனா, இந்த லிஃப்ட் பாக்ஸை எப்படி டிசைன் பண்றாங்கன்னு பல விஷயங்கள தேடிப் பார்த்தப்போதான் எனக்குப் பல ஆச்சரியமான உண்மைகள் கிடைச்சது. நம்ம ஊர்ல இருக்குற பெரிய அப்பார்ட்மெண்ட், மால்ஸ்ல இருக்குற லிஃப்ட்ல நுழைஞ்சதும் அங்க இருக்குற லிஃப்ட் கண்ணாடி முதல்ல பார்த்து எல்லாரும் தலை வாரவோ. இல்லனா செல்பி எடுக்கவோதான் செய்வாங்க.

ஆனா, நிஜத்துல அது சும்மா அழகுக்காக வச்ச டிசைன் இல்லைங்க. அதுக்கு பின்னாடி பயங்கரமான கஸ்டமர் சைக்காலஜியும், வீல்சேர்ல (Wheelchair) வர்ற மாற்றுத் திறனாளிங்க யாருடைய ஹெல்ப்பும் இல்லாம, அவங்களே ஈஸியா லிஃப்ட்டை யூஸ் பண்றதுக்கு ஒரு சூப்பர் டிசைனும் இதுக்குள்ள ஒளிஞ்சிருக்கு.

நம்ம கண்ணு முன்னாடியே ஒளிஞ்சிருக்க ஒரு செம சைக்காலஜி ட்ரிக்:

முன்னாடிலாம் உயரமான பில்டிங் கட்ட ஆரம்பிச்சப்போ, லிஃப்ட்ல போறவங்க எல்லாரும் "என்னப்பா இது, லிஃப்ட் இவ்வளவு ஸ்லோவா போகுது! உள்ளே போனாலே ஒரு மாதிரி அடைச்ச மாதிரி பயமா இருக்குப்பா!"னு கம்ப்ளைன்ட் பண்ணாங்க. அப்போ இன்ஜினியர்கள் லிஃப்ட்டோட வேகத்தை எக்ஸ்ட்ராவா கூட்டுறதுக்கு பதிலா, ஒரு சூப்பர் ஐடியா பண்ணி உள்ள கண்ணாடியை மாட்டுனாங்க. ஏன்னா, மக்கள் உள்ள போனதும் கண்ணாடி முன்னாடி நின்னு தங்களைச் சரி பண்றதுலயே பிஸியா ஆயிட்டாங்க!

லிஃப்ட் கண்ணாடி - World Fastest Elevator
லிஃப்ட் கண்ணாடி - World Fastest Elevator

இதனால டைம் போறதே தெரியாம லிஃப்ட் டிராவல் டைம் ரொம்ப கம்மியான மாதிரி ஒரு ஃபீல் கிடைச்சதுன்னு 'சைக்காலஜி டுடே' (psychologytoday.com) வெப்சைட் ரிப்போர்ட்ல தெளிவா சொல்லியிருக்காங்க.

அதுமட்டும் இல்லாம, ‘பெட்டி மாதிரி மூடிய அடைச்ச இடத்துக்குள்ள போனா’ இயல்பா பயம் வரும் கிளாஸ்ட்ரோஃபோபியா (Claustrophobia) பிரச்னை இருக்குறவங்களுக்கு, இந்த கண்ணாடி வந்து லிஃப்ட்டை இன்னும் பெரிய இடமா காட்டுற ஒரு உணர்வை உண்டாக்கி பயத்தைக் குறைக்குது.

வீல்சேர்ல வர்றவங்க லிஃப்ட்டை விட்டு வெளிய போகும்போது, திரும்ப இடமில்லாம பின்னாடி ரிவர்ஸ்ல (Reverse) ஈஸியா இறங்க இந்த கண்ணாடிதான் பெரிய ஹெல்ப்பா இருக்கு. ஒருவேளை லிஃப்ட்ல கண்ணாடி இல்லனா, உள்ள இருக்குற அந்த சின்ன இடம் நமக்கு பயங்கர மூச்சுத்திணறலையும், எரிச்சலையும் தந்துடும்.

உலகின் அதிவேக லிஃப்ட் எது தெரியுமா?

சரி, ஸ்பீடுன்னு வந்துட்டா உலகத்துலயே ரொம்ப பாஸ்ட்டா போற லிஃப்ட் எங்க இருக்கு தெரியுமா?. ‘சீனாவுல இருக்குற குவாங்சோ சிடிஎஃப் (Guangzhou CTF) பைனான்ஸ் சென்டர் பில்டிங்லதான்’ உலகத்துலேயே ஸ்பீடான லிஃப்ட் இருக்கு.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க இதோ சில 'அட்வென்ச்சர்' இடங்கள்!
லிஃப்ட் கண்ணாடி - World Fastest Elevator

இதைப் பத்தி 'ஹிட்டாச்சி கம்பெனி' (hitachi.com) மற்றும் 'கின்னஸ் உலக சாதனை' ரெஜிஸ்டர் பண்ற ஒரிஜினல் வெப்சைட்ல என்ன சொல்லியிருக்காங்கன்னா, இந்த லிஃப்ட் ஒரு நிமிஷத்துக்கு 1,260 மீட்டர் (மணிக்கு 75.6 கி.மீ) வேகத்துல பறக்குமாம். வெறும் 42 செகண்ட்ல 95 மாடிக்கு நம்மள கொண்டு போயிடும்.

லிஃப்ட் இவ்வளவு ஸ்பீடா போறதால காது அடைக்காம இருக்க, ஏர் பிரஷரை கன்ட்ரோல் பண்ற பயங்கரமான ஸ்பெஷல் இன்ஜினியரிங் டெக்னாலஜியையும் இதுல வச்சிருக்காங்க.

இனிமே நீங்க எப்ப லிஃப்ட்ல ஏறி அந்த கண்ணாடி முன்னாடி நின்னாலும், இந்த ‘வேர்ல்ட் கிளாஸ்’ இன்ஜினியரிங் மேஜிக்கும், உங்களுக்குப் பின்னாடி இருக்குறவங்களோட பாதுகாப்பும் தான் ஞாபகத்துக்கு வரும், இல்லையா? ஆக, இதெல்லாம் சும்மா கிடையாதுங்க, நம்ம மூளையையும், மனசையும் பத்திரமா பாத்துக்குற பக்கா சயின்ஸ் ட்ரிக்ஸ். இந்தச் சுவாரசியமான விஷயம் உங்க பிரண்ட்ஸ் யாருக்காச்சும் தெரியலன்னா, உடனே அவங்களுக்கும் இதை ஷேர் பண்ணி ஒரு குட்டி ‘WOW எஸ்பிரியன்ஸ்’ அவங்களுக்கு ஏற்படுத்துங்க.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் சுவை இனி உங்கள் வீட்டிலும்! செஃப் (Chef) சொன்ன ரகசியம்!
லிஃப்ட் கண்ணாடி - World Fastest Elevator

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், அன்றாடம் நாம் பயன்படுத்தும் லிஃப்டில் ஒளிந்துள்ள சுவாரசியமான உளவியல் தந்திரங்களையும், ஆபத்திலிருந்து பாதுகாக்கும் இன்ஜினியரிங் நுட்பங்களையும் அறிந்து கொண்டு, உங்கள் நண்பர்களுடன் பகிரக்கூடிய ஒரு சிறந்த அறிவூட்டும் அனுபவத்தைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com