குளிர்காலம்... லேப்டாப் பத்திரம்!

Laptop Tips
Laptop Tips
Published on

குளிர்காலத்தில் மின்னணு சாதனங்களை பராமரிப்பது ஒரு சவாலான விஷயமாக இருக்கிறது. அதிலும் லேப்டாப்பை சரியாக பராமரிக்காவிட்டால் பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். அந்த வகையில் குளிர்காலத்தில் லேப்டாப்பை பயன்படுத்தும் போது ஒருபோதும் செய்யக்கூடாத 6 விஷயங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. குளிர்ந்த வெப்பநிலை

குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் போது லேப்டாப்பை ஒரு குளிர்ந்த அறையிலோ அல்லது காரிலோ நீண்ட நேரம் வைத்திருந்தால், அதன் உள்ளே ஈரப்பதம் உருவாகி, இந்த ஈரப்பதம் லேப்டாப்பின் சர்க்யூட்களை ஷார்ட் செய்து சாதனத்தை சேதப்படுத்தும். ஆகவே, லேப்டாப்பை எப்போதும் சாதாரண வெப்பநிலையில் வைக்க முயற்சி செய்யுங்கள்.

2. உடனே ஆன் செய்ய வேண்டாம்

குளிர்ந்த சூழலில் இருந்து சற்று வெப்பமான இடத்திற்கு லேப்டாப்பை திடீரெனக் கொண்டு வந்தால் உடனடியாக பவர் பட்டனை அழுத்தி அதை ஆன் செய்யாமல் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருந்து ஆன் செய்யவும். இது லேப்டாப் தற்போதைய வெப்ப நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்வதற்கான வழியாகும் .

3. ஹீட்டருக்கு அருகில் வைக்க வேண்டாம்

குளிர்காலத்தில் ஹீட்டர்களின் பயன்பாடு சாதாரணமாக இருப்பதால், லேப்டாப்பை ஹீட்டருக்கு அருகில் வைக்க வேண்டாம். ஹீட்டருக்கு அருகில் லேப்டாப் வைப்பதால் லேப்டாப்பின் உள்ளே வெப்பநிலை விரைவாக அதிகரித்து, இது பேட்டரிக்கும் மதர்போர்டுக்கும் சேதத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
புதிய லேப்டாப் வாங்கும்போது இதெல்லாம் தெரிஞ்சுக்காம வாங்காதீங்க!
Laptop Tips

4. வென்டிலேஷனை கவனிக்கவும்

குளிர்காலத்தில், மக்கள் உடல் வெப்பத்தைத் தக்கவைக்க போர்வைகள் மற்றும் பிறவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதே போல லேப்டாப்பை போர்வைக்கு அடியில் வைத்து ஒருபோதும் இயக்க வேண்டாம். இது வென்டிலேஷனைத் தடுத்து லேப்டாப் அதிகமாக சூடாகும் என்பதால் லேப்டாப்பை எப்போதும் தடிமனான, தட்டையான மேற்பரப்பில் வைக்கவும்.

5. குளிர்ந்த காலநிலை

பயணம் செய்யும்போதுதான் குளிர் அதிகமாக உணரப்படும். வெப்பநிலை மிகவும் குறையும் போது, அதாவது பயணம் செய்யும்போது, லேப்டாப்பை நன்கு பேடிங் செய்யப்பட்ட மற்றும் இன்சுலேட் செய்யப்பட்ட ஒரு கேஸில் வைக்கவும். எக்ஸ்போஸ்டாக வைக்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
கம்ப்யூட்டர், லேப்டாப்புகளில் நைட் மோட் (மஞ்சள் விளக்கு) பற்றி தெரியுமா?
Laptop Tips

6. சார்ஜிலிருந்து பாதுகாக்கவும்

குளிர்காலத்தில், வறண்ட காற்று காரணமாக ஸ்டேடிக் சார்ஜ் அதிகரித்து, இது லேப்டாப் வன்பொருளை சேதப்படுத்தும். இந்த நேரத்தில் லேப்டாப்பைப் பயன்படுத்தும்போது ஆன்டி ஸ்டேடிக் சாதனங்களைப் பயன்படுத்துவது நல்லது.

மேற்கூறிய ஆறு டிப்ஸ்களை சரியாக கையாண்டால் லேப்டாப் குளிர்காலத்தில் தொல்லை கொடுக்காமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com