ஜப்பானில் நடத்தப்பட்ட 6G சோதனை… டேய் யாருடா நீங்கெல்லாம்? 

6G trial conducted in Japan
6G trial conducted in Japan

இப்போதுதான் பல இடங்களில் 5G நெட்வொர்க் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் ஒரு படி மேலே போய் 6G நெட்வொர்க் பரிசோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக ஜப்பான் தான் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உலகில் முதன் முதலில் நெட்வொர்க் துறையில் 2G வந்தது. பின்னர் அதைத்தொடர்ந்து 3G,4G போன்ற நெட்வொர்க்குகள் அறிமுகம் செய்யப்பட, தற்போது அதிவேகம் கொண்ட சமீபத்திய நெட்வொர்க்காக 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது உலக அளவில் இந்த நெட்வொர்க் முன்னேற்றம் பெற்று வரும் நிலையில், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் 5G சேவையை இந்தியாவில் விரிவுபடுத்த தொடங்கியுள்ளன. 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க் சேவை கொண்டு வரப்படும் என இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இதற்கிடையில், உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஜப்பான் தற்போது 6ஜி சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பிரபலமான டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, 6ஜி புரோட்டோடைப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த சோதனையின் மூலம் அடுத்த தலைமுறை நெட்வொர்க் 6G-யின் வேகம் எவ்வளவு இருக்கும் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். 

அதாவது 5G சேவையில் இருக்கும் வேகத்தை விட, 6G நெட்வொர்க்கின் வேகம் சுமார் 20 மடங்கு அதிகமாக இருக்கும் என ஜப்பான் தெரிவித்துள்ளது. அதாவது நொடிக்கு 100GB வேகத்தில் தரவுகளை வேகமாகப் பகிர முடியும். வெறும் புரோட்டோடைப் வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் இவ்வளவு வேகம் கிடைத்துள்ளதென்றால், இதற்காகவே உருவாக்கப்படும் உண்மையான சாதனத்தில் இதன் வேகம் மேலும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
5G தொழில்நுட்பம் என்றால் என்ன?.. இன்டர்நெட்டில் ஏற்படப்போகும் புரட்சி! 
6G trial conducted in Japan

அடுத்த கட்டமாக, 6ஜி சேவையை மேலும் மேம்படுத்தக்கூடிய ஹார்ட்வேர் சாதனங்களை உருவாக்கி, மீண்டும் மற்றொரு சோதனையை ஜப்பான் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக கிட்டத்தட்ட 1 Tbps வேகம் வரை அடைய முடியும் என ஜப்பான் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த அசுரவேக நெட்வொர்க், தொழில்நுட்ப உலகை வேறு விதமாக மாற்றப்போகிறது. நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் மின்னல் வேகத்தில் தரவுகளை நாம் பரிமாற முடியும். அதேநேரம் தரவுகளை டவுன்லோட் செய்யும் வேகமும் அதிகரிக்கும். 

இதன் மூலமாக பல துறைகள் முன்னேறி, உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுரவேகமெடுக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com