Digital Wellbeing - செல்போன் போதைக்கான Digital Detox

Digital Wellbeing
Digital WellbeingImg credit: Freepik
Published on

மது, சிகரெட் போன்ற போதைகளையும் விட மிகக் கொடியதானது என்னவென்று தெரியுமா? ஒவ்வொரு நாளும் நாம் அதில் மூழ்கி கொண்டிருக்கின்றோம். அதுதான் டிஜிட்டல் போதை. 

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நம் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பம் ஒரு இன்றியமையாத அங்கமாக மாறி உள்ளது. அதிகப்படியான திரை நேரம் மற்றும் டிஜிட்டல் போதை ஆகியவை நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என தெரிந்தும் கூட, நம்மால் அதற்கு அடிமையாகாமல் இருக்க முடியவில்லை.  

கவலை வேண்டாம்! இவற்றில் இருந்து நாம் சுயமாகவே வெளிவரமுடியும். அதெப்படி?

அதற்குத்தான் இருக்குதே டிஜிட்டல் நல்வாழ்வு (Digital Wellbeing).

Digital Wellbeing என்பது தொழில்நுட்பத்தை முற்றிலுமாக கைவிடுவது அல்ல. தொழில்நுட்பத்திலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்ளவது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாக, அளவுடன் தேவைக்கேற்ப பயன்படுத்துவது ஆகும்.

படுக்கை அறைக்குச் செல்லும்போதும் உணவருந்த செல்லும்போதும் செல்போனை தவிர்க்கலாம். சமூக ஊடகங்களில் மூழ்கி இருப்பதை தவிர்க்க, புதிய திறன்களை வளர்த்தல் மற்றும் மனத்திற்குப் பிடித்த நண்பர்களுடன் உரையாடுதல் போன்று தொழில்நுட்பத்தை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்தலாம். இவ்வாறு, செய்வதன் மூலம் டிஜிட்டல் போதையில் இருந்து கொஞ்சாம் கொஞ்சமாக நம்மால் வெளி வர முடியும். 

இதையும் படியுங்கள்:
மார்பக புற்றுநோயை 5 வருடங்களுக்கு முன்பே கண்டறியும் AI வசதி!
Digital Wellbeing

இவற்றையும் விட, வேறு ஒரு எளிதான வழி இருக்கிறதா? என்று கேட்டால்.. ஆம், அதுவும் நாம் பயன்படுத்தும் செல்போன்களிலேயே டிஜிட்டல் போதைக்கான தீர்வு உள்ளது. அதெப்படி?

முதலில், உங்கள் செல்போனின் செட்டிங்ஸ்க்குள் நுழையவும். அதில், Digital Wellbeing & Parental Control என்ற அம்சத்திற்குள் செல்லவும். நுழைந்த உடன், Dashboard என்ற செட்டிங்ஸ் இருக்கும். அங்கு, ஒரு நாளைக்கு என்ற கால அடிப்படையில், எந்தெந்த செயலியில் எவ்வளவு நேரம் செலவு செய்திருக்கிறீர்கள் என்றும், எந்தெந்த செயலிகளில் இருந்து எவ்வளவு நோட்டிபிகேஷன்கள் வந்திருக்கின்றன என்றும், ஒரு செயலியை எத்தனை முறை ஓப்பன் செய்திருக்கிறீர்கள் என்றும் வரைபட வடிவத்தில் காண்பிக்கும். இந்தத் தரவுகளை வைத்து, அதிக நேரம் மூழ்கி இருக்கும் செயலி எது என்று எளிதாக கண்டுபிடித்துவிடுவதுடன், அதை குறைப்பதற்கு, ஒரு நாளில் இவ்வளவு மணி நேரம் மட்டுமே அந்த செயலியைப் பயன்படுத்த முடியும் என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் வரையறுத்துக் கொள்ளவும் முடியும். 

Dashboard அம்சத்திற்கு அடுத்தபடியாக, Bedtime Mode என்ற ஆப்ஷனுக்குள் நுழையவும். Bedtime Routine என்பதை தேர்வு செய்து, நீங்கள் வழக்கமாக தூங்க செல்லும் நேரத்தையும், காலையில் எழும்பும் நேரத்தையும் அதில் set செய்து கொள்ளவும். பிறகு, அதற்கு கீழே உள்ள Customize ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். இதில் உள்ள Do Not Disturb என்பதை ஆன் செய்து, நாம் தூங்கும்போது நோட்டிபிகேஷன் வராதவாறும், Grayscale என்பதை ஆன் செய்து தொடுதிரையை monocrome அதாவது கருப்பு வெள்ளை நிறத்திலும் மாற்றிக் கொள்ளவும் முடியும். காலையில் அலாரம் அடிக்கும்போது இந்த Bedtime Mode ஆப்ஷனும் தானாக ஆஃப் ஆகிவிடும் வகையிலும் set செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்யும்போது, எந்தவித டிஜிட்டல் இடையூறும் இன்றி நாம் நிம்மதியாக தூங்க முடியும்.  

அடுத்ததாக, Focus Mode. படித்தல், வரைதல், போன்ற மற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் போது, செல்போனின் சிணுங்கல்கள் உங்களை கவனச் சிதறலுக்கு உள்ளாக்கி இருக்கிறதா? அதற்கு உதவும் வகையில் தான் இந்த Focus Mode உள்ளது. இதன் வழியாக, ஆப்ஸ்களை இடைநிறுத்தவும், அவற்றின் notification-களை மறைக்கவும் முடியும். 

செல்போனில் இயல்பாக உள்ளமைக்கப்பட்ட இதுபோன்ற Digital Wellbeing அம்சங்கள் அல்லது ஆப்ஸ்களை பயன்படுத்தி, டிஜிட்டல் போதையில் இருந்து எளிதாக விடுபடலாம். அதோடு, நம்முடைய சுய ஒழுக்கமும் (Self discipline) இதற்கு அவசியமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

அப்புறம் என்ன யோசனை உடனே செட்டிங்ஸ்க்கு செல்ல வேண்டியதுதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com