2024-ல் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன் இவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்! 

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் தற்போது சந்தையில் பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் வந்துவிட்டதால், அதில் சரியானதைத் தேர்வு செய்து வாங்குவது சவாலானதாகவே உள்ளது. நீங்கள் 2024ல் ஸ்மார்ட்போன் வாங்கப் போகிறீர்கள் என்றால் எதுபோன்ற விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

OS: நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க முடிவெடுக்கிறீர்கள் என்றால் முதலில் கவனிக்க வேண்டியது என்ன இயங்குதல ஸ்மார்ட்போனை வாங்கப் போகிறீர்கள் என்பதுதான். அதுவும் தற்போது சந்தையில் பிரபலமாக இருப்பது Android மற்றும் iOS. உலகில் பெரும்பாலான நபர்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த இயங்குதளம் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். அதேபோல நீங்கள் ஒரு பிரீமியம் ரக பயன்பாட்டை அனுபவிக்க விரும்புகிறீர்கள் என்றால் iOS சாதனத்தை வாங்குவது நல்லது. 

செயல்திறன்: இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போனின் செயல்திறன் மிகவும் முக்கியமானது. அப்போதுதான் மல்டி டாஸ்கிங், கேமிங் மற்றும் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்திற்கு சரியாக இருக்கும். சக்தி வாய்ந்த செயலிகள் போதுமான, அளவு ரேம் மற்றும் சேமிப்புத்திறன் கொண்ட சாதனங்களைத் தேர்ந்தெடுங்கள். குறிப்பாக எதுபோன்ற பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனித்து வாங்குங்கள். ஸ்மார்ட்போன் வாங்கும்போது புதிய ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவும். 

டிஸ்ப்ளே மற்றும் அளவு: உங்களது பயன்பாடு மற்றும் தேவைகளுக்கு ஏற்ப ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் அளவுகளை கவனித்து வாங்கவும். நீங்கள் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவீர்கள் என்றால், நல்ல தரமான டிஸ்ப்ளே கொண்ட சாதனம் வாங்குவது நல்லது. பெரும்பாலான நேரத்தை வெளியே கழிப்பீர்கள் என்றால், பாக்கெட்டில் பொருந்தும் படி சிறிய அளவில் ஸ்மார்ட் போனை தேர்வு செய்யுங்கள். 

கேமரா: இப்போதெல்லாம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தியே பெரும்பாலான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஐ போனில் திரைப்படமெல்லாம் எடுக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், எந்த அளவுக்கு துல்லியமான கேமராக்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளது என்று. எனவே நீங்கள் புகைப்படம் எடுக்க விரும்பும் நபராக இருந்தால், கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்கவும். அதன் மெகாபிக்சல் அளவு, இமேஜ் ஸ்டெபிலைசேஷன், நைட் மோடு போன்ற அம்சங்கள் இருக்கும்படியான ஸ்மார்ட்போனை தேர்வு செய்யுங்கள். 

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்:  இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலமாக உங்களது ஸ்மார்ட்போனை நீங்கள் வேகமாக சார்ஜ் செய்ய முடியும். எனவே 2024 நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கப் போகிறீர்கள் என்றால் இந்த அம்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல அதிக பேட்டரி அளவு கொண்ட ஸ்மார்ட்போனை வாங்குங்கள். 

5ஜி நெட்வொர்க்: இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக 5ஜி நெட்வொர்க் பொருத்தப்பட்டு வருகிறது. எனவே அடுத்த சில ஆண்டுகளில் 5G பயன்பாடுதான் பிரதானமாக இருக்கும் என்பதால், இப்போதே 5G சப்போர்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. இவற்றின் விலை சற்று கூடுதலாக இருந்தாலும், எதிர்கால நலனுக்காக இவற்றை தேர்வு செய்யலாம். தற்போது பத்தாயிரம் ரூபாயிலேயே 5G ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. எனவே உங்களது பயன்பாட்டுக்கு ஏற்ப சரியான ஸ்மார்ட் போனை தேர்வு செய்யுங்கள். 

மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்: நீங்கள் இப்போது ஸ்மார்ட்போன் வாங்குகிறீர்கள் என்றால், எதிர்காலத்தில் எத்தனை ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள். இது எதிர்காலத்தில் ஸ்மார்ட்போனில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய பெரிதளவில் உதவும். அதேநேரம் தொடர்ச்சியாக ஒரே ஸ்மார்ட்போனை நீண்ட காலம் பயன்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கைவிட வேண்டிய 7 விஷயங்கள்! 
ஸ்மார்ட்போன்

பட்ஜெட்: நீங்கள் என்ன விலையில் ஸ்மார்ட்போன் வாங்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானித்து, அந்த பட்ஜெட்டில் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போனைத் தேர்வு செய்யுங்கள். தேவையில்லாமல் அதிக விலை கொடுத்து வாங்கி, அதில் இருக்கும் அம்சங்களைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பதற்கு, குறைந்த விலை ஸ்மார்ட்போனை வாங்கி மீதம் இருக்கும் பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு சேமிக்கலாம். 

இப்படி, மேலே குறிப்பிட்டுள்ள எல்லா விஷயங்களையும் கவனித்து 2024ல் சிறந்த ஸ்மார்ட் போனை தேர்வு செய்து வாங்குங்கள். பிறருக்கு பந்தா காட்டுவதற்காக ஒருபோதும் ஸ்மார்ட்போன் வாங்காதீர்கள். உங்களுடைய தேவை மற்றும் பயன்பாட்டுக்கு போதுமான ஸ்மார்ட்போனை தேர்வு செய்யுங்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com